இந்தியா

பாரபட்சமின்றி நிவாரணம் ஏ.ஐ.டி.யு.சி., வலியுறுத்தல்

Added : நவ 21, 2021
Share
Advertisement
புதுச்சேரி : 'கட்டடத் தொழிலாளர் நலவாரிய உறுப்பினர்கள் அனைவருக்கும் பாகுபாடின்றி 5 ஆயிரம் ரூபாய் வழங்கிட வேண்டும்' என ஏ.ஐ.டி.யு.சி. ,வலியுறுத்தி உள்ளது.ஏ.ஐ.டி.யு.சி., மாநிலப் பொதுச் செயலாளர் சேது செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கை:புதுச்சேரி முதல்வர் கடந்த சில தினங்களுக்கு முன்பு கட்டடத் தொழிலாளர் நலவாரியத்தில் உறுப்பினராக உள்ள சிகப்பு ரேஷன் கார்டுதாரர்களுக்கு மட்டும் 5

புதுச்சேரி : 'கட்டடத் தொழிலாளர் நலவாரிய உறுப்பினர்கள் அனைவருக்கும் பாகுபாடின்றி 5 ஆயிரம் ரூபாய் வழங்கிட வேண்டும்' என ஏ.ஐ.டி.யு.சி. ,வலியுறுத்தி உள்ளது.

ஏ.ஐ.டி.யு.சி., மாநிலப் பொதுச் செயலாளர் சேது செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கை:புதுச்சேரி முதல்வர் கடந்த சில தினங்களுக்கு முன்பு கட்டடத் தொழிலாளர் நலவாரியத்தில் உறுப்பினராக உள்ள சிகப்பு ரேஷன் கார்டுதாரர்களுக்கு மட்டும் 5 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என அறிவித்திருந்தார்.

இது, பாரபட்சமானதாகும்.கடும் மழையால் வேலை இழந்து, வருமானம் இன்றி இருந்து வரும் கட்டடத் தொழிலாளர் நலவாரிய உறுப்பினர்கள் அனைவருக்கும் பாகுபாடின்றி 5 ஆயிரம் ரூபாய் வழங்கிட வேண்டும். இதர அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு மழைக்கால நிவாரணமாக 5 ஆயிரம் ரூபாய் வழங்கிட நடவடிக்கை வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X