சம்பவம் செய்தி

தமிழ்நாடு

போலீசாரின் மன அழுத்தத்தை போக்க 'காவல் நலவாழ்வு மையம்- 2.0' துவக்கம்

Added : நவ 21, 2021
Share
Advertisement
சென்னை : போலீசார், உடல் நலம், மன நலத்தை பேணி, புத்துணர்ச்சியுடன் பணி புரிய, 'காவல் நலவாழ்வு மையம்- 2.0' என்ற புதிய திட்டத்தை, சென்னை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் நேற்று துவக்கி வைத்தார்.பெண் காவல் அதிகாரிகள் மற்றும் ஆயுதப்படை பெண் காவலர்கள், குடும்ப வாழ்வில் சிறந்து விளங்க, 'சமநிலை வாழ்வு முறை' என்ற தலைப்பில் பயிற்சி வழங்கப்பட்டது.இதன் தொடர்ச்சியாக, போலீசாரின் மன
 போலீசாரின் மன அழுத்தத்தை போக்க 'காவல் நலவாழ்வு மையம்- 2.0' துவக்கம்

சென்னை : போலீசார், உடல் நலம், மன நலத்தை பேணி, புத்துணர்ச்சியுடன் பணி புரிய, 'காவல் நலவாழ்வு மையம்- 2.0' என்ற புதிய திட்டத்தை, சென்னை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் நேற்று துவக்கி வைத்தார்.

பெண் காவல் அதிகாரிகள் மற்றும் ஆயுதப்படை பெண் காவலர்கள், குடும்ப வாழ்வில் சிறந்து விளங்க, 'சமநிலை வாழ்வு முறை' என்ற தலைப்பில் பயிற்சி வழங்கப்பட்டது.இதன் தொடர்ச்சியாக, போலீசாரின் மன அழுத்தத்தை போக்க, அவர்களுக்கு தேவையான மனநல ஆலோசனை வழங்கி, புத்துணர்ச்சியுடன் பணி புரிய, காவல் நலவாழ்வு மையம் துவங்க முடிவு செய்யப்பட்டது.வேளச்சேரி, குருநானக் கல்லுாரியில், 'காவல் நலவாழ்வு மையம்- 2.0' என்ற புதிய திட்டத்தை, நேற்று சென்னை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் துவக்கி வைத்தார்.

கமிஷனர் பேசியதாவது: காவல் நலவாழ்வு மையத்தை, சென்னை பெருநகர் காவல் துறை, செல்லமுத்து அறக்கட்டளை மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், அடையாறு டி.டி.கே., மருத்துவமனை மற்றும் பெங்களூரு, என்.ஐ.எம்.எச்.ஏ.என்.எஸ்., நிறுவனம்இணைந்து நடத்தும். இதில், மூன்று உளவியல் ஆலோசகர்கள், ஒரு மனநல மருத்துவர் அடங்கிய குழு, போலீசாருக்கு உடல் நலம் பேண தேவையான ஆலோசனை, அறிவுரை வழங்குவர். இதன் வாயிலாக, போலீசாரின் உடல் நலம், மனநலம் காப்பதுடன், புத்துணர்ச்சியுடன் பணி புரிவர்.

இந்த மையம், வாரம்தோறும் திங்கள் முதல் சனிக்கிழமை வரை செயல்படும்.இவ்வாறு கமிஷனர் பேசினார்.நிகழ்ச்சியில், சென்னை பெருநகர காவல் கூடுதல் ஆணையர் லோகநாதன் மற்றும் மருத்துவமனை நிர்வாகிகள், கல்லுாரி நிர்வாகிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X