சம்பவம் செய்தி

தமிழ்நாடு

சிறுவன் பார்வையை பறித்தது நாட்டு வெடி; இறுதி ஊர்வலத்தில் விபரீதம்; மூவர் கைது

Added : நவ 21, 2021
Share
Advertisement
எம்.ஜி.ஆர். நகர் : ஜாபர்கான்பேட்டையில், இறுதி ஊர்வலத்தில் வெடிக்கப்பட்ட நாட்டு வெடியால், சிறுவனின் பார்வை பறிபோனது. இதற்கு காரணமான மூவரை, போலீசார் கைது செய்தனர்.ஜாபர்கான்பேட்டை, பச்சையம்மன் தெருவைச் சேர்ந்தவர் அழகு சுந்தரம். இவரது மனைவி ராதா. தம்பதிக்கு புவனேஷ்வரி, 18, என்ற மகளும், சந்தோஷ், 14, என்ற மகனும் உள்ளனர்.கடந்த, 14ம் தேதி சிறுவன் சந்தோஷ், சகோதரி புவனேஷ்வரியை பார்க்க

எம்.ஜி.ஆர். நகர் : ஜாபர்கான்பேட்டையில், இறுதி ஊர்வலத்தில் வெடிக்கப்பட்ட நாட்டு வெடியால், சிறுவனின் பார்வை பறிபோனது. இதற்கு காரணமான மூவரை, போலீசார் கைது செய்தனர்.

ஜாபர்கான்பேட்டை, பச்சையம்மன் தெருவைச் சேர்ந்தவர் அழகு சுந்தரம். இவரது மனைவி ராதா. தம்பதிக்கு புவனேஷ்வரி, 18, என்ற மகளும், சந்தோஷ், 14, என்ற மகனும் உள்ளனர்.கடந்த, 14ம் தேதி சிறுவன் சந்தோஷ், சகோதரி புவனேஷ்வரியை பார்க்க ஜாபர்கான்பேட்டை, ஜான் கென்னடி தெரு வழியாக சென்றார்.

அப்போது, அங்கு சென்ற இறுதி ஊர்வலத்தில் பட்டாசு வெடித்துள்ளனர். பட்டாசில் இருந்து சிதறிய கல், சிறுவனின் இடது கண்ணில் பட்டு காயம் ஏற்பட்டுள்ளது. சிறுவனின் கண்ணை பரிசோதித்ததில் பார்வை பாதிக்கப்பட்டுள்ளதாக, மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.சம்பவம் தொடர்பாக, பாதிக்கப்பட்ட சிறுவனின் சகோதரி புவனேஷ்வரி, எம்.ஜி.ஆர்., நகர் காவல் நிலையத்தில், நவ., 15ல் புகார் அளித்தார். புகாரின்படி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்தனர்.

விசாரணையில், ஜான் கென்னடி தெருவை சேர்ந்த விமலா, 41, என்பவரின் இறுதி ஊர்வலத்தில், நாட்டு வெடி வெடித்ததும், எம்.ஜி.ஆர்., நகரைச் சேர்ந்த சண்முகவேல், 23, என்பவர் நாட்டு வெடியை வெடித்ததால் சிறுவனின் பார்வை பறிபோனதும் தெரியவந்தது.இதையடுத்து, நாட்டு வெடியை விற்ற நெசப்பாக்கத்தைச் சேர்ந்த செல்வகுமார், 35, அதை வாங்கி வெடித்த ஜாபர்கான்பேட்டையைச் சேர்ந்த குணசேகரன், 24, சண்முகவேல் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X