இந்தியா

வெள்ளம் வடிய நெடுஞ்சாலை உடைப்பு

Added : நவ 21, 2021
Share
Advertisement
புதுச்சேரி : இந்திரா சிக்னலில் தேங்கிய மழைநீர் வடிய, அண்ணா நகர் வீட்டு வசதி வாரியம் அருகே நெடுஞ்சாலையில் பள்ளம் தோண்டியதால், புது பஸ் நிலையம் செல்லும் வாகனங்கள் நுாறடி சாலை வழியாக திருப்பி விடப்பட்டன.புதுச்சேரி நகரின் பிரதான சந்திப்பான இந்திரா சிக்னல், ஒவ்வொரு மழையின் போதும் வெள்ளம் சூழ்ந்து தத்தளிக்கிறது. அண்ணா நகர் வாய்க்காலில் வெள்ளம் உள்வாங்காததால், பல
 வெள்ளம் வடிய நெடுஞ்சாலை உடைப்பு

புதுச்சேரி : இந்திரா சிக்னலில் தேங்கிய மழைநீர் வடிய, அண்ணா நகர் வீட்டு வசதி வாரியம் அருகே நெடுஞ்சாலையில் பள்ளம் தோண்டியதால், புது பஸ் நிலையம் செல்லும் வாகனங்கள் நுாறடி சாலை வழியாக திருப்பி விடப்பட்டன.

புதுச்சேரி நகரின் பிரதான சந்திப்பான இந்திரா சிக்னல், ஒவ்வொரு மழையின் போதும் வெள்ளம் சூழ்ந்து தத்தளிக்கிறது. அண்ணா நகர் வாய்க்காலில் வெள்ளம் உள்வாங்காததால், பல நாட்களாக இந்த சிக்னலில் குளம்போல் தண்ணீர் தேங்கி நிற்பது தொடர்கதையாக உள்ளது.சாலை உடைப்புகடந்த இரு நாட்களாக, பெய்த கனமழையால் இந்திரா சிக்னலில் வெள்ளம் சூழ்ந்தது.நிலைமை மோசமானதால், நேற்று வீட்டு வசதி வாரிய அலுவலகம் எதிரே, விழுப்புரம் நெடுஞ்சாலையை ஜே.சி.பி,, இயந்திரம் மூலம் பள்ளம் தோண்டி, அண்ணா நகர் பெரிய வாய்க்காலில் தண்ணீரை வெளியேற்றினர்.

அண்ணா நகர் சிறிய வாய்க்காலில் பெருக்கெடுத்த வெள்ளத்தை, பொதுப்பணி துறையினர் மூன்று மோட்டார் பம்புகள் மூலம் பெரிய வாய்க்காலில் இறைத்தனர். அதை தொடர்ந்து, இந்திரா சிக்னலில் படிப்படியாக வெள்ளம் வடிந்தது.போக்குவரத்திற்கு தடைவிழுப்புரம் நெடுஞ்சாலையில் பள்ளம் தோண்டியதால் இந்திரா சிக்னலில் இருந்து நெல்லித்தோப்பு வழியாக வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டது.இந்திரா சிக்னலில் இருந்து புது பஸ் நிலையத்திற்கு செல்லும் வாகனங்கள் நுாறடி சாலை, புவன்கரே வீதி, நெல்லித்தோப்பு மார்க்கெட் வழியாக திருப்பி விடப்பட்டன.

கடலுாரில் இருந்து வந்த வாகனங்கள் காராமணிக்குப்பம் சாலை வழியாக புது பஸ் நிலையம் சென்றன.அதேவேளையில் புது பஸ் நிலையத்தில் இருந்து இந்திரா சிக்னலை நோக்கி செல்ல வாகனங்கள் அனுமதிக்கப் பட்டன.இதன் காரணமாக இந்திரா காந்தி சிக்னலில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

சாய்தள சாலையாக மாற்றம்இந்திரா சிக்னலில் வெள்ளம் வடிவதற்காக உடைக்கப்பட்ட நெடுஞ்சாலையை சீரமைக்கும் பணி நடந்து வருகிறது. தார், ஜல்லிகள் அகற்றப்பட்டு, சிமெண்ட் சாலையாக, சாய்தளமாக போடப்படுகிறது.இதன் மூலம் நடேசன் நகர் நெடுஞ்சாலையில் தேங்கும் தண்ணீர் விரைவாக பெரிய வாய்க்காலில் கலந்து விடும் என பொதுப்பணித் துறை நீர்பாசன கோட்ட அதிகாரிகள் தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X