வட்ட செயலரிடம் ஆட்டை சிறுவன் உட்பட மூவர் கைது| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

வட்ட செயலரிடம் 'ஆட்டை' சிறுவன் உட்பட மூவர் கைது

Added : நவ 21, 2021
Share
அமைந்தகரை : தி.மு.க., வட்ட செயலரின் கட்சி அலுவலக பூட்டை உடைத்து திருடிய சிறுவன் உட்பட மூவரை போலீசார் நேற்று கைது செய்தனர்.அரும்பாக்கம், என்.எஸ்.கே., நகர், 23வது தெருவைச் சேர்ந்தவர் ஜெய்சங்கர், 54; தி.மு.க., வட்ட செயலர். இவர், அதே பகுதியில் கட்சி அலுவலகம் மற்றும் பிளாஸ்டிக் நிறுவனம் நடத்தி வருகிறார். வழக்கம் போல் நேற்று முன்தினம் இரவு, கட்சி அலுவலகத்தை பூட்டி சென்றார். சிறிது

அமைந்தகரை : தி.மு.க., வட்ட செயலரின் கட்சி அலுவலக பூட்டை உடைத்து திருடிய சிறுவன் உட்பட மூவரை போலீசார் நேற்று கைது செய்தனர்.

அரும்பாக்கம், என்.எஸ்.கே., நகர், 23வது தெருவைச் சேர்ந்தவர் ஜெய்சங்கர், 54; தி.மு.க., வட்ட செயலர். இவர், அதே பகுதியில் கட்சி அலுவலகம் மற்றும் பிளாஸ்டிக் நிறுவனம் நடத்தி வருகிறார். வழக்கம் போல் நேற்று முன்தினம் இரவு, கட்சி அலுவலகத்தை பூட்டி சென்றார். சிறிது நேரம் கழித்து வந்து பார்த்த போது, அலுவலக பூட்டு உடைக்கப்பட்டிருந்தது.

உள்ளே சென்று பார்த்த போது, 3,000 ரூபாய் பணத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது. அத்துடன் அங்கிருந்த சிலை மற்றும் பொருட்கள் சேதமடைந்திருந்தது. அமைந்தகரை காவல் நிலையத்தில், ஜெய்சங்கர் புகார் அளித்தார்.விசாரணையில், அம்பத்துாரைச் சேர்ந்த 17 வயது சிறுவன், அயப்பாக்கத்தைச் சேர்ந்த மணிகண்டன், 23, அயனாவரத்தைச் சேர்ந்த ராஜேஷ், 33 ஆகியோர் குடிபோதையில் திருடியது தெரியவந்தது. அவர்களை அமைந்தகரை போலீசார் நேற்று கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X