ஆரியப்பாளையம் பாலத்தில் சேறு, சகதிகள் அகற்றும் பணி | Dinamalar

ஆரியப்பாளையம் பாலத்தில் சேறு, சகதிகள் அகற்றும் பணி

Added : நவ 21, 2021
Share
வில்லியனுார் : சங்கராபரணி ஆற்றில் கரைபுரண்டோடிய வெள்ளத்தால், ஆரியப்பாளையம் மேம்பாலத்தில் குவிந்திருந்த சேறு மற்றும் சகதிகளை பொதுப்பணி மற்றும் தீயணைப்பு துறையினர் சுத்தம் செய்தனர்.புதுச்சேரி மற்றும் தமிழக பகுதியில் தொடர்ந்து பெய்த மழை மற்றும் வீடூர் அணை திறப்பு, ஊசுட்டேரியின் உபரி நீர் திறப்பு உள்ளிட்ட காரணங்களால், சங்கராபரணி ஆற்றில் வெள்ளப் பெருக்கு
 ஆரியப்பாளையம் பாலத்தில் சேறு, சகதிகள் அகற்றும் பணி

வில்லியனுார் : சங்கராபரணி ஆற்றில் கரைபுரண்டோடிய வெள்ளத்தால், ஆரியப்பாளையம் மேம்பாலத்தில் குவிந்திருந்த சேறு மற்றும் சகதிகளை பொதுப்பணி மற்றும் தீயணைப்பு துறையினர் சுத்தம் செய்தனர்.

புதுச்சேரி மற்றும் தமிழக பகுதியில் தொடர்ந்து பெய்த மழை மற்றும் வீடூர் அணை திறப்பு, ஊசுட்டேரியின் உபரி நீர் திறப்பு உள்ளிட்ட காரணங்களால், சங்கராபரணி ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது.

புதுச்சேரி- விழுப்புரம் நகர்களை இணைக்கும் முக்கிய வழித்தடத்தில், வில்லியனுார் ஆரியப்பாளையம் மேம்பாலத்தை மூழ்கடித்தவாறு வெள்ளம் ஓடியது. அதை தொடர்ந்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போக்குவரத்தை தடைசெய்து, மாற்றுப் பாதையில் திருப்பி விடப்பட்டது.

இந்நிலையில் சங்கராபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு குறைந்துள்ளதால், மேம்பாலத்தில் வாகனங்களை அனுமதிக்கும் வகையில், பாலத்தின் மீது குவிந்திருந்த சேறு மற்றும் சகதிகளை அகற்றும் பணி நடந்தது.பொதுப்பணித் துறை மற்றும் வில்லியனுார் தீயணைப்பு துறையினர் இணைந்து இப்பணியை மேற்கொண்டனர்.

கவர்னர் ஆய்வு செய்த பிறகு, பிற்பகல் 2:00 மணி முதல் கார் மற்றும் இருசக்கர வாகனங்கள் பாலத்தில் செல்ல போலீார் அனுமதித்தனர்.பஸ் உள்ளிட்ட கனரக வாகனங்கள் பாலத்தில் செல்ல அனுமதிக்கப்படவில்லை.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X