பரோடா வங்கி சார்பில் வீட்டுக்கடன் கண்காட்சி

Added : நவ 21, 2021
Share
Advertisement
புதுச்சேரி : பரோடா வங்கியின் புதுச்சேரி பிராந்தியம், முன்னணி பில்டர்கள் மற்றும் கட்டுமான நிறுவனங்களுடன் இணைந்து ஏற்பாடு செய்துள்ள, 'பிராப்பர்ட்டி எக்ஸ்போ- 2021' கண்காட்சி, புதுச்சேரி ஜெயராம் திருமண நிலையத்தில் நேற்று துவங்கியது.முதல்வர் ரங்கசாமி, துவக்கி வைத்து பேசுகையில், புதுச்சேரியின் வளர்ச்சியில் வங்கிகள் பங்கு பெற வேண்டும் என குறிப்பிட்டார். வங்கியின் இந்த
 பரோடா வங்கி சார்பில் வீட்டுக்கடன் கண்காட்சி

புதுச்சேரி : பரோடா வங்கியின் புதுச்சேரி பிராந்தியம், முன்னணி பில்டர்கள் மற்றும் கட்டுமான நிறுவனங்களுடன் இணைந்து ஏற்பாடு செய்துள்ள, 'பிராப்பர்ட்டி எக்ஸ்போ- 2021' கண்காட்சி, புதுச்சேரி ஜெயராம் திருமண நிலையத்தில் நேற்று துவங்கியது.

முதல்வர் ரங்கசாமி, துவக்கி வைத்து பேசுகையில், புதுச்சேரியின் வளர்ச்சியில் வங்கிகள் பங்கு பெற வேண்டும் என குறிப்பிட்டார். வங்கியின் இந்த முயற்சியை பாராட்டினார். சபாநாயகர் செல்வம் சிறப்புரையாற்றினார்.வங்கியின் பொது மேலாளர் ரங்கராஜன் பேசுகையில், 'தனிவீடு, அடுக்குமாடி குடியிருப்பு வாங்குவோர், சொந்தமாக வீடு கட்டுவோர், வீடுகளை புதுப்பிக்க விரும்புவோர் என அனைவரின் தேவைக்கேற்ப மிக குறைந்த வட்டி விகிதத்தில் கடன் வழங்கப்படுகிறது.

ஏற்கனவே அதிக வட்டி விகிதத்தில் வேறு நிறுவனங்களில் வீட்டு கடன் வாங்கியுள்ளோர் பரோடா வங்கிக்கு கடனை மாற்றிக்கொள்ளும் வசதியும், அதே மாத தவணைக்குள் 'டாப் அப்' செய்து கொள்ளும் வசதியும் உள்ளது' என்றார்.ஏற்பாடுகளை வங்கியின் பிராந்திய மேலாளர் கண்ணன், துணை பிராந்திய மேலாளர் அமல சவுந்தரராஜ் ஆகியோர் செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X