6 சைக்கிள் திருடியவர் கைது

Added : நவ 21, 2021
Share
Advertisement
புதுச்சேரி : நகரப் பகுதியில் 6 சைக்கிள்களை திருடிய சாலையோர டிபன் கடை உரிமையாளரை போலீசார் கைது செய்தனர்.புதுச்சேரி சந்தா சாகிப் வீதியை சேர்ந்தவர் முகமது யாகூப் மகன் முகமது சல்மான், 18. கல்லுாரி மாணவரான இவர், தனது சைக்கிளை வீட்டின் முன் கடந்த 18ம் தேதி நிறுத்தி இருந்தார். மறுநாள் பார்த்தபோது சைக்கிளை காணவில்லை.இது குறித்து அவர் ஒதியஞ்சாலை போலீசில் புகார்
 6 சைக்கிள் திருடியவர் கைது

புதுச்சேரி : நகரப் பகுதியில் 6 சைக்கிள்களை திருடிய சாலையோர டிபன் கடை உரிமையாளரை போலீசார் கைது செய்தனர்.புதுச்சேரி சந்தா சாகிப் வீதியை சேர்ந்தவர் முகமது யாகூப் மகன் முகமது சல்மான், 18. கல்லுாரி மாணவரான இவர்,

தனது சைக்கிளை வீட்டின் முன் கடந்த 18ம் தேதி நிறுத்தி இருந்தார். மறுநாள் பார்த்தபோது சைக்கிளை காணவில்லை.இது குறித்து அவர் ஒதியஞ்சாலை போலீசில் புகார் அளித்தார்.இதேபோல் ஒதியஞ்சாலை பகுதிகளில் பல இடங்களில் அடுத்தடுத்து சைக்கிள் திருட்டுபோனது.அதை தொடர்ந்து, திருட்டு நடந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி., காட்சி பதிவுகளை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தினர்.

அதில், சைக்கிள்களை திருடியது திப்புராயப்பேட்டை ராஜிவ்காந்தி நகரை சேர்ந்தஇ சாலையோர டிபன் கடை உரிமையாளர் ஜாகீர்பாஷா,31, என்பது தெரிய வந்தது அவரது மனைவி நிஷா,28, திருட்டிற்கு உடந்தையாக இருப்பது தெரிந்தது.ஜாகீர் பாஷாவை கைது செய்த போலீசார், அவர் வீட்டில் பதுக்கி வைத்திருந்த 6 சைக்கிள்களை மீட்டனர். நிஷாவை தேடி வருகின்றனர்.பறிமுதல் செய்யப்பட்ட சைக்கிள்களை கிழக்கு எஸ்.பி., தீபிகா பார்வையிட்டு, போலீசாரை பாராட்டினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X