பொது செய்தி

இந்தியா

ஆரியப்பாளையத்தில் புதிய மேம்பாலம்; கவர்னர் தமிழிசை தகவல்

Added : நவ 21, 2021
Share
Advertisement
வில்லியனுார் : சங்கராபரணி ஆற்றின் வெள்ளப் பெருக்கால், பாதுகாப்பு கருதி, கரை யோரம் வசித்த குடும்பங்களை ஆரியப்பாளையத்தில் உள்ள அரசு பள்ளியில் தங்க வைத்துள்ளனர்.அவர்களுக்கு, கவர்னர் தமிழிசை மதிய உணவு வழங்கி குறைகளை கேட்டறிந்தார். முகாமில் தங்கி உள்ள பள்ளி சிறுவர்களுடன் அமர்ந்து தானும் உணவு சாப்பிட்டார். மாணவர்களுக்கு நோட்டு புத்தகங்களை வழங்கி, பாதுகாப்பாக
 ஆரியப்பாளையத்தில் புதிய மேம்பாலம்;   கவர்னர் தமிழிசை தகவல்


வில்லியனுார் : சங்கராபரணி ஆற்றின் வெள்ளப் பெருக்கால், பாதுகாப்பு கருதி, கரை யோரம் வசித்த குடும்பங்களை ஆரியப்பாளையத்தில் உள்ள அரசு பள்ளியில் தங்க வைத்துள்ளனர்.

அவர்களுக்கு, கவர்னர் தமிழிசை மதிய உணவு வழங்கி குறைகளை கேட்டறிந்தார். முகாமில் தங்கி உள்ள பள்ளி சிறுவர்களுடன் அமர்ந்து தானும் உணவு சாப்பிட்டார். மாணவர்களுக்கு நோட்டு புத்தகங்களை வழங்கி, பாதுகாப்பாக இருக்குமாறு அறிவுறுத்தினார்.பின்னர் ஆரியப்பாளையம் சங்கராபரணி ஆற்றில் வெள்ளப் பெருக்கை பார்வையிட்டார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:ஆரியப்பாளையம் அரசு பள்ளியில் தங்கியுள்ள குடும்பங்களுக்கு பாய், போர்வை உள்ளிட்ட பொருட்கள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஆரியப்பாளையம் சங்கராபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு காலங்களில் அபாயகரமான சூழலை தடுக்கும் வகையில், புதிய மேம்பாலம் கட்டப்படும்.நாளை (22ம் தேதி) மத்திய குழு மழை பாதிப்புகளை மதிப்பிட புதுச்சேரி வருகிறது. அவர்களை நானும், முதல்வரும் சந்தித்து பேசுவோம்.காலாப்பட்டு பகுதியில் கடல் அரிப்பு ஏற்பட்டுள்ளது. அப்பகுதியில் கருங்கல் மற்றும் மணல் பரப்பி பாதுகாப்பு நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப் பட்டுள்ளது.மழையால் பாதிக்கப்பட்ட இடங்களை நானும், முதல்வரும் தொடர்ந்து பார்வையிட்டு, என்ன உதவிகள் வேண்டும் என கவனித்து வருகிறோம்.

இவ்வாறு கவர்னர் கூறினார்.கலெக்டர் பூர்வா கார்க், தாசில்தார் கார்த்திகேயன், பொதுப்பணி துறை நீர்பாசன கோட்ட செயற்பொறியாளர் பாலசுப்ரமணியன், கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் ஆறுமுகம் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X