தமிழ்நாடு

கொடைக்கானலில் ஆரஞ்சு சீசன்

Added : நவ 21, 2021
Share
Advertisement
கொடைக்கானல்--கொடைக்கானல் மற்றும் தாண்டிக்குடி மலைப்பகுதியில் ஆரஞ்சு சீசன் துவங்கியுள்ளது.இம்மலைப்பகுதியில் காபிக்கு மத்தியில் ஊடுபயிராக கமலா எனப்படும் கொடை ஆரஞ்சு சாகுபடி செய்யப்படுகிறது. ஆண்டுதோறும் அக்டோபரில் துவங்கும் சீசன் ஜனவரியில் நிறைவடையும்.தாண்டிக்குடி, பெருமாள்மலை, அடுக்கம், சாமகாட்டுபள்ளம், பாச்சலூர், பாலமலை பகுதிகளில் விளைச்சல் அதிகம் உள்ளது.
கொடைக்கானலில் ஆரஞ்சு சீசன்

கொடைக்கானல்--கொடைக்கானல் மற்றும் தாண்டிக்குடி மலைப்பகுதியில் ஆரஞ்சு சீசன் துவங்கியுள்ளது.இம்மலைப்பகுதியில் காபிக்கு மத்தியில் ஊடுபயிராக கமலா எனப்படும் கொடை ஆரஞ்சு சாகுபடி செய்யப்படுகிறது

. ஆண்டுதோறும் அக்டோபரில் துவங்கும் சீசன் ஜனவரியில் நிறைவடையும்.தாண்டிக்குடி, பெருமாள்மலை, அடுக்கம், சாமகாட்டுபள்ளம், பாச்சலூர், பாலமலை பகுதிகளில் விளைச்சல் அதிகம் உள்ளது. துவக்கத்தில் கமலா ரகம் விவசாயிகளுக்கு நல்ல பலனை அளித்து வந்தது. நடுவே நாக்பூர் ஓட்டு ஆரஞ்சு நடவு செய்யப்பட்டது.இதனால் ஏராளமான நோய் தாக்கி குறிப்பிட்ட சில பகுதிகளில் இதன் மகசூல் அடியோடு பாதித்துள்ளது. மை நோய், சாம்பல் நோய், சக்கிங் மாத், இலைத்துரு நோய் பாதிப்பால் மரங்கள் பட்டுப் போய், மகசூல் இழப்பை சந்தித்தன.

சீதோஷ்ண நிலை மாற்றமும் ஒரு காரணமாக அமைந்தது.சில ஆண்டுகளாக நல்ல மழை பெய்து வரும் நிலையில் மீண்டும் இவை உயிர் பெறுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. தற்போது சாமக்காடு, அடுக்கம் பகுதியில் விளைந்துள்ளது. சுவை மிகுந்த இப்பழத்திற்கு மார்க்கெட்டில் ஏக கிராக்கி உள்ளது. தற்போது கிலோ ரூ. 40 முதல் 50 வரை விற்கப்படுகிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X