வடமதுரை-கொல்லபட்டி சமத்துவ புரத்தில் குடியிருப்போர் குறித்த விபரங்கள் கணக்கெடுப்பு பணி நேற்று நடந்தது.வடமதுரை கொல்லப்பட்டியில் 2010ல் துவங்கிய சமத்துவபுர கட்டுமான பணி நிறைவடையும் முன்னரே ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. அடுத்து வந்த அ.தி.மு.க., ஆட்சியில் கண்டுகொள்ளப்படாமல் இருந்த சமத்துவபுரம் குறித்து தினமலர் செய்தி வெளியிட்டதன் பலனாக பயனாளிகள் தேர்வு நடந்து வீடுகள் வழங்கப்பட்டன.தகுதியற்ற பலரும் வீடுகளை பெற்று கொண்டு அங்கு வசிக்கவில்லை. சில வீடுகள் வெளியூர் நபர்களுக்கு வாடகைக்கு விட்டனர். இந்நிலையில் அங்கு வசிப்போருக்குள் சச்சரவுகள் ஏற்பட்டு பொது அமைதி குறைந்துள்ளது.இதுகுறித்தும் தினமலர் நாளிதழ் செய்தியிட்டது.இதனையடுத்து பி.டி.ஓ., வசந்தா தலைமையில் இரண்டாவது முறையாக நேற்று ஆய்வு நடந்தது. அங்குள்ள வீடுகளின் நிலை, வசிப்பவர் பயனாளியா, வாடகைக்கு வசிப்பவரா என்பது போன்ற விபரங்களை 4 குழுக்களாக வந்திருந்த ஊழியர்கள் சேகரித்தனர்.அதிகாரிகள் கூறுகையில், ''மாவட்ட அளவில் இருக்கும் 9 சமத்துவபுரங்களிலும் இதுபோன்ற கணக்கெடுப்பு நடப்பதாக'' தெரிவித்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE