பொது செய்தி

தமிழ்நாடு

அரசு அறிவிப்பை மோசடிக்குபயன்படுத்தும் கும்பல்கள்

Added : நவ 21, 2021
Share
Advertisement
திண்டுக்கல்-- -அரசு எந்த அறிவிப்புகளை வெளியிட்டாலும் அதன் வாயிலாக மோசடி செய்து பணம் பறிக்கும் கும்பல்கள் அதிகமாகியுள்ளதால் கவனமாக இருக்க திண்டுக்கல் சைபர் கிரைம் போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.ஆன்லைன் மோசடிகள் தற்போது அதிகரித்து வருகின்றன. குறிப்பாக கொரோனா காலத்திற்கு பின் இது பன்மடங்கு அதிகரித்துள்ளது. கொரோனாவால் பொருளாதார ரீதியாக பலரும் கடுமையாக

திண்டுக்கல்-- -அரசு எந்த அறிவிப்புகளை வெளியிட்டாலும் அதன் வாயிலாக மோசடி செய்து பணம் பறிக்கும் கும்பல்கள் அதிகமாகியுள்ளதால் கவனமாக இருக்க திண்டுக்கல் சைபர் கிரைம் போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.ஆன்லைன் மோசடிகள் தற்போது அதிகரித்து வருகின்றன. குறிப்பாக கொரோனா காலத்திற்கு பின் இது பன்மடங்கு அதிகரித்துள்ளது. கொரோனாவால் பொருளாதார ரீதியாக பலரும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.வேலையின்மை, தொழில் முடக்கம், பணப்புழக்கம் என எல்லாம் முடங்கிற்று. தற்போது மக்கள் மெல்ல மெல்ல இயல்புநிலைக்கு திரும்பி வருகின்றனர்.இந்நிலையில் பண ஆசை காட்டி மோசடி நடக்கிறது. முக்கியமாக அரசு அறிவிப்புகள் ஏமாற்றுவதற்கு பயன்படுத்தப்படுகின்றன. மாநில, மத்திய அரசின் கொரோனா நிவாரண தொகை வழங்குவதாக மோசடி, தொழில் தொடங்க தனி நபருக்கு அரசு பணம் தருவதாக மோசடி, வேலை வாய்ப்பு மோசடிகள் என வரிசை நீள்கிறது. இதுகுறித்து சைபர் கிரைம் போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். தற்போது விவசாயிகளை குறிவைத்து அரசு மானியம், திட்டங்களை கூறி ஏமாற்றுவதாக கூறுகின்றனர். வேளாண் சட்டத்தை திரும்ப பெற்ற அறிவிப்பைக் கூட பயன்படுத்தி, தகவல்களை ஏமாற்ற வாய்ப்பு உள்ளது. பொதுமக்கள் கவனமுடன் இருக்க வேண்டும் என போலீசார் தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X