சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ஊராட்சி அலுவலகத்தில் சேற்றை வீசியோர் மீது புகார்

Added : நவ 21, 2021
Share
Advertisement
பட்டிவீரன்பட்டி--அய்யங்கோட்டை ஊராட்சி அலுவலகம் மீது சேற்றை வாரி வீசியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி போலீஸில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.அய்யங்கோட்டை ஊராட்சியில் வார்டு உறுப்பினர்களுக்கும் - ஊராட்சி நிர்வாகத்திற்கும் இடையே நீண்ட நாட்களாக பிரச்னை இருப்பதால் ஊராட்சி அலுவலகம் செயல்படாமல் உள்ளது.இங்கிருந்த ஊராட்சி செயலாளரை மாற்றி, வெளியூரைச் சேர்ந்தவரை

பட்டிவீரன்பட்டி--அய்யங்கோட்டை ஊராட்சி அலுவலகம் மீது சேற்றை வாரி வீசியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி போலீஸில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.அய்யங்கோட்டை ஊராட்சியில் வார்டு உறுப்பினர்களுக்கும் - ஊராட்சி நிர்வாகத்திற்கும் இடையே நீண்ட நாட்களாக பிரச்னை இருப்பதால் ஊராட்சி அலுவலகம் செயல்படாமல் உள்ளது.இங்கிருந்த ஊராட்சி செயலாளரை மாற்றி, வெளியூரைச் சேர்ந்தவரை நியமித்த பின்னும் ஊராட்சி அலுவலகம் பூட்டியே கிடப்பதாக பொதுமக்கள் புகார் கூறுகின்றனர்.ஊராட்சி பிரச்சினைகளுக்காக அலுவலகத்தை அணுக முடியாத சூழல் ஏற்பட்டதால் ஆத்திரமடைந்த சிலர் சேறு, மாட்டுச்சாணம், சாக்கடைக் கழிவுகளை ஊராட்சி அலுவலக பெயர்ப்பலகைகள், அலுவலக சுவர், கதவு உள்ளிட்ட இடங்களில் வாரி இறைத்து எதிர்ப்பை தெரிவித்தனர். இதுகுறித்து ஊராட்சி தலைவர் சுந்தரராஜ், பட்டிவீரன்பட்டி போலீசில் புகார் அளித்துள்ளார். போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X