செல்லிப்பட்டு படுகையணையில் உடைப்பு

Added : நவ 21, 2021
Advertisement
திருக்கனுார் : வீடூர் அணையில் இருந்து அதிகளவில் தண்ணீர் திறக்கப்பட்டதால், ஏற்கனவே சேதமடைந்திருந்த செல்லிப்பட்டு- பிள்ளையார்குப்பம் படுகை அணையின் நடுப்பகுதி முழுமையாக உடைந்தது.புதுச்சேரி, திருக்கனுார் அடுத்த செல்லிப்பட்டு- பிள்ளையார்குப்பம் இடையே, சங்கராபரணி ஆற்றின் குறுக்கே 1906ம் ஆண்டு பிரெஞ்சு ஆட்சி காலத்தில் படுகை அணை கட்டப்பட்டது.உரிய பராமரிப்பு இல்லாததால்,
 செல்லிப்பட்டு படுகையணையில் உடைப்பு

திருக்கனுார் : வீடூர் அணையில் இருந்து அதிகளவில் தண்ணீர் திறக்கப்பட்டதால், ஏற்கனவே சேதமடைந்திருந்த செல்லிப்பட்டு- பிள்ளையார்குப்பம் படுகை அணையின் நடுப்பகுதி முழுமையாக உடைந்தது.

புதுச்சேரி, திருக்கனுார் அடுத்த செல்லிப்பட்டு- பிள்ளையார்குப்பம் இடையே, சங்கராபரணி ஆற்றின் குறுக்கே 1906ம் ஆண்டு பிரெஞ்சு ஆட்சி காலத்தில் படுகை அணை கட்டப்பட்டது.உரிய பராமரிப்பு இல்லாததால், கடந்த 2016ம் ஆண்டு பெய்த மழையால் படுகை அணையில் நடுப்பகுதியின் கீழ்தளம் சேதமடைந்தது

.தற்போது, தொடர் மழையால் நீர் வரத்து காரணமாக படுகை அணையில் மேலும் பல இடங்களில் கீழ்தளம் உடையத் துவங்கியது.கடந்த 12ம் தேதி, படுகை அணையை பார்வையிட்ட கவர்னர் தமிழிசை, இப்பகுதியில் புதிய அணை கட்டவும், சுற்றுலாத் தலமாக மாற்றவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

இந்நிலையில், தொடர் கனமழையால் தமிழகப் பகுதியான வீடூர் அணையில் இருந்து சங்கராபரணி ஆற்றில் அதிகப்படியான தண்ணீர் திறக்கப்பட்டதால், வரலாறு காணாத வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. இதனால் சங்கராபரணி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட அனைத்து படுகை அணைகளும் மூழ்கின.இந்நிலையில், செல்லிப்பட்டு- பிள்ளையார்குப்பம் படுகை அணையில் சேதமடைந்த நடுப்பகுதி, தற்போது பெருக்கெடுத்து ஓடும் வெள்ளத்தால் முழுமையாக உடைந்து விட்டது.

இதனால் பல ஆயிரம் கனஅடி தண்ணீர் வீணாக சங்கராபரணி ஆற்றின் வழியாக சென்று கடலில் கலக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், ' அணை முழுமையாக உடைய அதிகாரிகளே காரணம். அணையை தற்காலிகமாக சீரமைப்பதோடு, புதிய அணை கட்டித்தர நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X