பொது செய்தி

இந்தியா

இரட்டை வாக்காளர் அட்டை கண்டறிய வலியுறுத்தல்

Added : நவ 21, 2021
Share
Advertisement
புதுச்சேரி : புதுச்சேரியில் செம்மையான வாக்காளர் பட்டியல் தயாரிப்பு குறித்த ஆலோசனை கூட்டம், கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது.வாக்காளர் பட்டியல் திருத்த பணியை மேற்பார்வையிடும், ஐ.ஏ.எஸ்., அதிகாரி அசோக்குமார் தலைமை தாங்கினார். எம்.எல்.ஏ.,க்கள் நேரு, கல்யாணசுந்தரம், வைத்தியநாதன், சிவசங்கர் மற்றும் அரசியல் கட்சி பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.இக்கூட்டத்தில்

புதுச்சேரி : புதுச்சேரியில் செம்மையான வாக்காளர் பட்டியல் தயாரிப்பு குறித்த ஆலோசனை கூட்டம், கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது.வாக்காளர் பட்டியல் திருத்த பணியை மேற்பார்வையிடும், ஐ.ஏ.எஸ்., அதிகாரி அசோக்குமார் தலைமை தாங்கினார்.

எம்.எல்.ஏ.,க்கள் நேரு, கல்யாணசுந்தரம், வைத்தியநாதன், சிவசங்கர் மற்றும் அரசியல் கட்சி பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.இக்கூட்டத்தில் எம்.எல்.ஏ.,க்கள் பேசுகையில், 'நுாறு சதவீத ஓட்டுப் பதிவிற்காக, மாநில தேர்தல் துறை நடவடிக்கை எடுத்தாலும் 85 சதவீதம் வரை தான் ஓட்டு பதிவாகிறது. மற்றவர்கள் ஓட்டு போடுவதில்லை. இவர்கள் புதுச்சேரியில் உள்ளனரா என தெரியவில்லை புதுச்சேரியை சேர்ந்தவர்கள் பிற மாநிலங்களிலும் குடியுரிமை பெற்றுள்ளனர்.அங்கும் வாக்காளர் அடையாள அட்டை வைத்துள்ளனர். இரட்டை வாக்காளர் அட்டை வைத்துள்ளவர்களை, ஆதார் எண்ணை இணைத்து கண்டறிய வேண்டும்' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X