பொது செய்தி

இந்தியா

மீனவர்களுக்கு ஓய்வூதியம் உயர்வு; முதல்வர் ரங்கசாமி உத்தரவு

Added : நவ 21, 2021
Share
Advertisement
புதுச்சேரி : புதுச்சேரியில் உள்ள 8,268 மீனவர்களுக்கு, பென்ஷன் தொகையை உயர்த்தி வழங்க முதல்வர் ரங்கசாமி உத்தரவிட்டதன்பேரில், அதற்கான அரசாணை வெளியிடப் பட்டுள்ளது.புதுச்சேரி மாநிலத்தில் முதியோர் உட்பட அனைத்து ஓய்வூதியதாரர்களுக்கும் 500 ரூபாய் உயர்த்தி வழங்க முதல்வர் ரங்கசாமி உத்தரவிட்டார்.இதன்படி, மகளிர் மேம்பாட்டுத் துறையின் கீழ் ஓய்வூதியம் பெறும் 1,54,847 பேருக்கு


புதுச்சேரி : புதுச்சேரியில் உள்ள 8,268 மீனவர்களுக்கு, பென்ஷன் தொகையை உயர்த்தி வழங்க முதல்வர் ரங்கசாமி உத்தரவிட்டதன்பேரில், அதற்கான அரசாணை வெளியிடப் பட்டுள்ளது.

புதுச்சேரி மாநிலத்தில் முதியோர் உட்பட அனைத்து ஓய்வூதியதாரர்களுக்கும் 500 ரூபாய் உயர்த்தி வழங்க முதல்வர் ரங்கசாமி உத்தரவிட்டார்.இதன்படி, மகளிர் மேம்பாட்டுத் துறையின் கீழ் ஓய்வூதியம் பெறும் 1,54,847 பேருக்கு ஓய்வூதியம் உயர்த்தி வழங்கப்பட்டது.

இதற்காக மாதம் 37 கோடி ரூபாய் செலவாகி வருகிறது.8,268 மீனவர்களுக்கு பென்ஷன், மீன்வளத் துறை மூலம் வழங்கப்படுகிறது. 50 வயது முதல் 59 வயது வரை 1,570 ரூபாய், 60 முதல் 79 வயது வரை 2,090 ரூபாய், 80 வயதிற்கு மேல் 3,135 ரூபாய் ஓய்வூதியம் பெற்று வந்தனர்.இவர்களுக்கும் தொகையை உயர்த்தி வழங்க முதல்வர் ரங்கசாமி உத்தரவிட்டார்.

துறை பட்ஜெட்டில் நிதி இல்லாததால் உடனே வழங்கப்படவில்லை.இந்நிலையில், மீனவர்களுக்கு ஆயிரம் ரூபாய் வரை, முதியோர் பென்ஷன் உயர்த்தி அரசாணை வெளியிடப் பட்டுள்ளது.இதன்மூலம், 50 முதல் 59 வயதிற்குட்பட்ட மீனவர்கள் 2,500 ரூபாய், 60 முதல் 79 வயது வரை உள்ளவர்கள் 3 ஆயிரம் ரூபாய், 80 வயதிற்கு மேல் உள்ளவர்கள் 4 ஆயிரம் ரூபாய் ஓய்வூதியம் பெறுவர்.மீனவர்களுக்கு ஓய்வூதியம் வழங்க மீன் வளத் துறைக்கு ஏற்கனவே மாதம் 1.68 கோடி ரூபாய் செலவாகி வந்தது.

தற்போது ஆயிரம் ரூபாய் உயர்த்தியதால், மாதம்தோறும் கூடுதலாக 75 லட்சம் ரூபாய் செலவாகும். உயர்த்தப்பட்ட பென்ஷன் தொகை, அடுத்த மாதம் முதல் மீனவர்களுக்கு கிடைக்கும்.மீனவர் நலத்துறை மூலமாக ஓய்வூதியம் பெற்றுவந்த மீனவர்களுக்கு கடந்த காங்., ஆட்சியில் 2020, ஏப்ரல் மாதம் மட்டும் 500 ரூபாய் உயர்த்தி வழங்கப்பட்டது. அதன் பிறகு ஓய்வூதிய உயர்வு கைவிடப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X