பொது செய்தி

இந்தியா

கனரா வங்கி நிறுவனர் தின விழா

Added : நவ 21, 2021
Share
Advertisement
புதுச்சேரி : கனரா வங்கியின் 116வது நிறுவனர் தின விழா, புதுச்சேரி கனரா வங்கி மண்டல அலுவலகத்தில் நேற்று நடந்தது.முத்தியால்பேட்டை வங்கி கிளை முதன்மை மேலாளர் சிவகுருநாதன் வரவேற்றார். உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று, கனரா வங்கி வித்யா ஜோதி திட்டத்தின் கீழ், அரசு பள்ளியில் பயிலும், 20 எஸ்.சி., எஸ்.டி. மாணவிகளுக்கு கல்வி உதவித் தொகையும், 8 பேருக்கு

புதுச்சேரி : கனரா வங்கியின் 116வது நிறுவனர் தின விழா, புதுச்சேரி கனரா வங்கி மண்டல அலுவலகத்தில் நேற்று நடந்தது.முத்தியால்பேட்டை வங்கி கிளை முதன்மை மேலாளர் சிவகுருநாதன் வரவேற்றார்.

உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று, கனரா வங்கி வித்யா ஜோதி திட்டத்தின் கீழ், அரசு பள்ளியில் பயிலும், 20 எஸ்.சி., எஸ்.டி. மாணவிகளுக்கு கல்வி உதவித் தொகையும், 8 பேருக்கு முத்ரா, வியாபாரம், கல்வி கடன் பிரிவுகளில் ரூ. 2.5 கோடி கடன் அனுமதி ஆணையை வழங்கினார்.அமைச்சர் நமச்சிவாயம் பேசுகையில், 'பெண்கள் நன்கு படித்தால் தங்களின் கனவு நனவாகும். வங்கி மூலம் கிடைக்கும் திட்டங்களை பயன்படுத்தி, வாழ்க்கையில் சிறப்பான இடத்தை எட்ட வேண்டும் என்றார்.

கனரா வங்கி மண்டல மேலாளர் எம்.என்.ராவ், வங்கி மூலம் கல்வி கடன், வீட்டு கடன், வாகன கடன், கிசான் கிரடிட் கார்டு, தங்க நகை கடன், சிறு குறு கடன்கள், முத்ரா கடன்கள் வழங்குவதாக தெரிவித்தார்.உதவி பொது மேலாளர் ராஜேஷ், கல்வி உதவித்தொகை பெற்ற மாணவிகளுக்கு வாழ்த்து தெரிவித்தார்.நேற்று மட்டும் பல்வேறு பிரிவுகளில் ரூ. 4.72 கோடி கடன் வழங்கப்பட்டது. மண்டல அலுவலக கோட்ட மேலாளர் சின்னிகிருஷ்ணன் நன்றி கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X