பொது செய்தி

இந்தியா

மேற்கூரை பெயர்ந்து விழுந்ததால் புதுச்சேரி ரயில் நிலையத்தில் பரபரப்பு

Added : நவ 21, 2021
Share
Advertisement
புதுச்சேரி : புதுச்சேரி ரயில் நிலைய டிக்கெட் புக்கிங் கவுன்டர் அறையில், பால்சீலிங் பெயர்ந்து விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.புதுச்சேரி ரயில் நிலையம் 150 ஆண்டுகள் பழமையானது. இங்கு, 3 டிக்கெட் புக் கிங் கவுண்டர்கள் உள்ளன.நேற்று மதியம் 2:15 மணிக்கு, புக்கிங் கவுண்டர் உட்புறத்தில் சிமெண்ட் காரை, பால்சீலிங் திடீரென பெயர்ந்து, ஊழியர்கள் மீது விழுந்ததால், அலறியடித்து வெளியே

புதுச்சேரி : புதுச்சேரி ரயில் நிலைய டிக்கெட் புக்கிங் கவுன்டர் அறையில், பால்சீலிங் பெயர்ந்து விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.புதுச்சேரி ரயில் நிலையம் 150 ஆண்டுகள் பழமையானது.

இங்கு, 3 டிக்கெட் புக் கிங் கவுண்டர்கள் உள்ளன.நேற்று மதியம் 2:15 மணிக்கு, புக்கிங் கவுண்டர் உட்புறத்தில் சிமெண்ட் காரை, பால்சீலிங் திடீரென பெயர்ந்து, ஊழியர்கள் மீது விழுந்ததால், அலறியடித்து வெளியே ஓடினர்.மேற்கூரை பெயர்ந்து விழுந்ததில் மின்விசிறி கம்ப்யூட்டர், பிரிண்டர்கள் சேதம் அடைந்தன. இதனால் ஒரு மணி நேரத்திற்கு டிக்கெட் புக்கிங் நிறுத்தப்பட்டது.பின்பு பயணிகள் காத்திருக்கும் வளாகத்தில், ஒரு கவுண்டர் திறக்கப்பட்டு, டிக்கெட் புக்கிங் பணி நடந்தது.ரயில் நிலைய அதிகாரிகள் கூறுகையில், 'டிக்கெட் புக்கிங் அறையில் பால்சீலிங் வழியாக தண்ணீர் ஒழுகியதால், அவற்றை மாற்றுவதற்காக அகற்றப்பட்டது. சிமெண்ட் காரை ஏதும் இடிந்து விழவில்லை. பராமரிப்பு பணி மேற்கொள்கிறோம்' என தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X