பொது செய்தி

தமிழ்நாடு

ரோடுகளில் திரிந்த மாடுகளின் உரிமையாளர்களுக்கு அபராதம்

Added : நவ 21, 2021
Share
Advertisement
திண்டுக்கல்- -திண்டுக்கல்லில் வாகன ஓட்டிகளுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் ரோட்டில் திரிந்த கால்நடைகளை பிடித்த மாநகராட்சியினர் உரிமையாளர்களுக்கு அபராதம் விதித்தனர்.திண்டுக்கல் நகரின் ரோடுகளில் கால்நடைகள் சுற்றித் திரிவதால் வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர். அவ்வப்போது விபத்தும் ஏற்படுகிறது.இதுகுறித்து பல்வேறு தரப்பிலும் புகார்கள் எழுந்தன. நேற்று தினமலர்

திண்டுக்கல்- -திண்டுக்கல்லில் வாகன ஓட்டிகளுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் ரோட்டில் திரிந்த கால்நடைகளை பிடித்த மாநகராட்சியினர் உரிமையாளர்களுக்கு அபராதம் விதித்தனர்.திண்டுக்கல் நகரின் ரோடுகளில் கால்நடைகள் சுற்றித் திரிவதால் வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர். அவ்வப்போது விபத்தும் ஏற்படுகிறது.இதுகுறித்து பல்வேறு தரப்பிலும் புகார்கள் எழுந்தன. நேற்று தினமலர் நாளிதழில் படம் வெளியானது. இந்நிலையில் கமிஷனர் சிவசுப்பிரமணியன் கால்நடைகளை பிடித்து உரிமையாளருக்கு அபராதம் விதிக்க உத்தரவிட்டார். நகர்நல அலுவலர் இந்திரா தலைமையிலான சுகாதார ஆய்வாளர்கள் நேற்று கோவிந்தாபுரம், ஆர்.எம்., காலனி உள்ளிட்ட பகுதியில் சாலையில் சுற்றித்திரிந்த பத்து மாடுகளை பிடித்தனர். அதன் உரிமையாளர்களை வரவழைத்து ஒரு மாட்டுக்கு ரூ.2000 அபராதம் விதித்ததுடன், அறிவுரை கூறி அனுப்பினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X