பொது செய்தி

தமிழ்நாடு

வேடிக்கை பார்க்க சுற்றுலா தலமா? வெள்ளத்தை காண வந்த மக்களால் நெருக்கடி

Added : நவ 21, 2021
Share
Advertisement
காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் பாலாற்றில் கரைபுரண்டு ஓடும் வெள்ளத்தை பார்க்க, மக்கள் குவிவதால், வாகன போக்குவரத்துக்கு நெருக்கடி ஏற்படுகிறது.வடகிழக்கு பருவமழை மற்றும் ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களில் பெய்த கன மழை காரணமாக, காஞ்சிபுரம் பாலாற்றில் வெள்ளம் பெருக்கெடுக்கிறது.இதனால் ஆற்றின் கரையோர மக்களுக்கு, வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. ஆர்ப்பரித்து தண்ணீர்

காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் பாலாற்றில் கரைபுரண்டு ஓடும் வெள்ளத்தை பார்க்க, மக்கள் குவிவதால், வாகன போக்குவரத்துக்கு நெருக்கடி ஏற்படுகிறது.

வடகிழக்கு பருவமழை மற்றும் ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களில் பெய்த கன மழை காரணமாக, காஞ்சிபுரம் பாலாற்றில் வெள்ளம் பெருக்கெடுக்கிறது.இதனால் ஆற்றின் கரையோர மக்களுக்கு, வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. ஆர்ப்பரித்து தண்ணீர் செல்வதால், பொதுமக்கள் கூடாமல் இருக்க, போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டு உள்ளது.எனினும் வாலாஜாபாத் - அவளூர் பாலம், திருமுக்கூடல் பாலம், செவிலிமேடு பாலம் என, அந்தந்த பகுதிகளில் பாலாற்றில் செல்லும் தண்ணீரை பார்க்க, பொதுமக்கள் படையெடுக்கின்றனர்.

ஓரிக்கை பாலாற்று பாலத்தில் நேற்று, பாய்ந்து செல்லும் வெள்ளத்தை, பொதுமக்கள் வேடிக்கை பார்த்தனர்.அவர்களின் வாகனங்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டதால், செவிலிமேடு பாலாற்றில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. ஆட்டோ, இருசக்கர வாகனங்களால் நெரிசல் அதிகமானது.செய்யாறு செல்லும் கன்டெய்னர் லாரி ஒன்று, பாலாற்று மேட்டு பகுதியில் ஓரமாக சென்றதால், மண்ணில் சக்கரம் இறங்கிவிட்டது.

போலீசார் வந்து போக்குவரத்தை சீர்செய்தனர்.திருவள்ளூர் மாவட்டம் திருவாலங்காடு ஒன்றியம், பாகசாலை, மணவூர், குப்பம்கண்டிகை ஊராட்சிகள் வழியாக பாய்ந்து பூண்டி ஏரியை சென்றடையும் கொசஸ்தலையாற்றில் வெள்ளபெருக்கு ஏற்பட்டுள்ளது.இந்நிலையில், குப்பம்கண்டிகை, எல்.வி.புரம் தரைப்பாலம் உடைந்த நிலையில், ஆற்று வெள்ளத்தை பார்வையிட பாகசாலை தரைப்பாலம் மட்டுமே உள்ளதால், சுற்று வட்டார பகுதி மக்களின் சுற்றுலாதலமாக அது மாறியுள்ளது.நுாற்றுக்கணக்கான மக்கள் குவிந்து ஆற்றை ஒட்டி நின்று, 'செல்பி' எடுத்தும், தரைப்பாலத்தின் மீது ஓடி பிடித்து விளையாடியும் வருகின்றனர்.

வெள்ளத்தின் தன்மை உணராமல் பாலம் மீது விளையாடும் மக்களை காவல் துறையினர் தடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X