பா.ம.க., நிர்வாகிகள் கூட்டம் ராமதாஸ் பங்கேற்பு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

பா.ம.க., நிர்வாகிகள் கூட்டம் ராமதாஸ் பங்கேற்பு

Added : நவ 21, 2021
Share
திண்டிவனம் : திண்டிவனத்தில் நடந்த நான்கு சட்டமன்ற தொகுதிகளுக்கான நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் பங்கேற்று பேசினார்.திண்டிவனத்தில் உள்ள கே.ஆர்.எஸ்., அம்மா மகாலில் திண்டிவனம், செஞ்சி, வானூர், மயிலம் ஆகிய சட்டசபை தொகுதிகளின் பா.ம.க., நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம் நடந்தது.மாநில தலைவர் ஜி.கே. மணி தலைமை தாங்கினார். மயிலம் எம்.எல்.ஏ., சிவக்குமார்,

திண்டிவனம் : திண்டிவனத்தில் நடந்த நான்கு சட்டமன்ற தொகுதிகளுக்கான நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் பங்கேற்று பேசினார்.

திண்டிவனத்தில் உள்ள கே.ஆர்.எஸ்., அம்மா மகாலில் திண்டிவனம், செஞ்சி, வானூர், மயிலம் ஆகிய சட்டசபை தொகுதிகளின் பா.ம.க., நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம் நடந்தது.மாநில தலைவர் ஜி.கே. மணி தலைமை தாங்கினார். மயிலம் எம்.எல்.ஏ., சிவக்குமார், மாவட்ட செயலாளர் சம்பத் பேசினர்.

பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் சிறப்புரையாற்றினர்.கூட்டத்தில், பேராசிரியர் தீரன், முன்னாள் எம்.பி., தன்ராஜ், மாநில துணைத் தலைவர்கள் கருணாநிதி, ரவி, மாநில செயற்குழு உறுப்பினர்கள் கே.ஆர்.எஸ். சுப்பராயலு, நல்லாவூர் ராஜூ, மாநில சட்டபாதுகாப்புக்குழு செயலாளர் வழக்கறிஞர் பாலாஜி, மாவட்ட துணை செயலாளர் ஜெயராஜ், திண்டிவனம் முன்னாள் நகர மன்ற உறுப்பினர்கள் செந்தில், சவுந்தர், நகர வன்னியர் சங்க செயலாளர் ரவி, நகர அமைப்பு செயலாளர் பொன்மொழி, முன்னாள் நகர செயலாளர் சண்முகம், பிச்சை முகமது, முன்னாள் மாவட்ட செயலாளர் பிரபு, சமூக நீதிப்பேரவை மாநில துணை செயலாளர் ஜெயச்சந்திரன், கோட்டக்குப்பம் நகர செயலாளர் சிவராமன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.திண்டிவனம் நகர பா.ம.க., செயலாளர் பால்பாண்டியன் ரமேஷ் நன்றி கூறினார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X