பொது செய்தி

தமிழ்நாடு

மாநகராட்சி ஸ்மார்ட் சிட்டி பணி நகராட்சி நிர்வாக இயக்குனர் ஆய்வு

Updated : நவ 21, 2021 | Added : நவ 21, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
மதுரை-மதுரை நகரில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பல்வேறு திட்டப்பணிகள் நடக்கின்றன.தமுக்கம் மைதானத்தில் ரூ.45.55 கோடியில் கட்டுமானப் பணி, குருவிக்காரன் சாலையில் ரூ.23.17 கோடியில் உயர்மட்ட பாலம், பெரியார் பஸ் ஸ்டாண்டில் ரூ.174.56 கோடியில் மேம்பாட்டு பணி உள்ளிட்ட பணிகளை நகராட்சி நிர்வாக இயக்குநர் பொன்னையா ஆய்வு செய்தார்.பின்னர் நடந்த ஆய்வுக்கூட்டத்தில் 100 வார்டுகளுக்கு
 மாநகராட்சி ஸ்மார்ட் சிட்டி பணி நகராட்சி நிர்வாக இயக்குனர் ஆய்வு

மதுரை-மதுரை நகரில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பல்வேறு திட்டப்பணிகள் நடக்கின்றன.தமுக்கம் மைதானத்தில் ரூ.45.55 கோடியில் கட்டுமானப் பணி, குருவிக்காரன் சாலையில் ரூ.23.17 கோடியில் உயர்மட்ட பாலம், பெரியார் பஸ் ஸ்டாண்டில் ரூ.174.56 கோடியில் மேம்பாட்டு பணி உள்ளிட்ட பணிகளை நகராட்சி நிர்வாக இயக்குநர் பொன்னையா ஆய்வு செய்தார்.

பின்னர் நடந்த ஆய்வுக்கூட்டத்தில் 100 வார்டுகளுக்கு குடிநீர் வழங்குதல், சாலை அமைத்தல், புதிய தெருவிளக்குகள் அமைத்தல், வரி வசூல் பணிகள், வரைபட மற்றும் கட்டட அனுமதி குறித்து விவாதிக்கப்பட்டது. மாநகராட்சி கமிஷனர் கார்த்திகேயன், துணை கமிஷனர் சங்கீதா, நகர்ப்பொறியாளர் சுகந்தி, நகர்நல அலுவலர் ராஜா, உதவி கமிஷனர்கள் தட்சிணாமூர்த்தி, அமிர்தலிங்கம், சுரேஷ்குமார், ரங்கராஜன், உதவி செயற்பொறியாளர் சுப்புத்தாய், கல்வி அலுவலர் ஆதிராமசுப்பு, பி.ஆர்.ஓ., மகேஸ்வரன் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Lion Drsekar - Chennai ,இந்தியா
21-நவ-202113:20:30 IST Report Abuse
Lion Drsekar இரகசியம் பரம ரகசியம் போல் எங்கெங்கு என்ன நடக்கிறது, அதன் மதிப்பு, எப்போது முடிவடையும் யாருக்கு கொடுத்திருக்கார் என்ற விபரங்கள் எதுவுமே இல்லாமல், நடத்தப்படுகிறது . எல்லாமே இப்படித்தான் செயல்படுகிறது, தனியார் மூலதனம் போட்டு செய்யப்படும் தொழில்களை மக்களின் நலனுக்காக பாராட்டப்படவேண்டிய அமைப்பாக இயங்கும் துறைகள் அக்குவேறு ஆணிவேராக ஆராய்வது போல் எல்லா துறைகளிலும் இதே நிலைப்பட்டைக்கொண்டு வந்தால் சாரம் முதல் எல்லாமே தரமாக இருக்குமே, வீரப்பாண்டிய கட்டபொம்மன் வசனம் இன்று எல்லோருக்கும் எல்லா துறைகளுக்கும் பொருத்தமாக இருப்பதுதான் வருத்தம் அளிக்கிறது, வந்தே மாதரம்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X