வருமுன் காப்போம் முகாமில் 25 வகை ரத்த பரிசோதனை| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

வருமுன் காப்போம் முகாமில் 25 வகை ரத்த பரிசோதனை

Added : நவ 21, 2021
Share
மதுரை-மதுரை மேற்கு ஊராட்சி ஒன்றியம் வெளிச்சநத்தத்தில் வருமுன் காப்போம் மருத்துவ முகாமை கலெக்டர் அனீஷ்சேகர் தலைமையில் அமைச்சர் மூர்த்தி துவக்கி வைத்தார்.அமைச்சர் பேசியதாவது: கருணாநிதி முதல்வராக இருந்த போது வருமுன் காப்போம் திட்டம் செயல்படுத்தப்பட்டது. அ.தி.மு.க., ஆட்சியில் இத்திட்டத்தை செயல்படுத்தவில்லை. தற்போதைய முதல்வர் ஸ்டாலின் இத்திட்டத்தை கொண்டு

மதுரை-மதுரை மேற்கு ஊராட்சி ஒன்றியம் வெளிச்சநத்தத்தில் வருமுன் காப்போம் மருத்துவ முகாமை கலெக்டர் அனீஷ்சேகர் தலைமையில் அமைச்சர் மூர்த்தி துவக்கி வைத்தார்.அமைச்சர் பேசியதாவது: கருணாநிதி முதல்வராக இருந்த போது வருமுன் காப்போம் திட்டம் செயல்படுத்தப்பட்டது. அ.தி.மு.க., ஆட்சியில் இத்திட்டத்தை செயல்படுத்தவில்லை. தற்போதைய முதல்வர் ஸ்டாலின் இத்திட்டத்தை கொண்டு வந்துள்ளார். மக்கள் மருத்துவமனையை தேடி செல்வதை தவிர்த்து மக்களை தேடி மருத்துவ வசதிகள் சென்றடைய மக்களை தேடி மருத்துவம் திட்டமும் கொண்டு வரப்பட்டுள்ளது.வருமுன் காப்போம் முகாமில் பல்வேறுநோய்களை கண்டறிந்து அதற்கான முதல் சிகிச்சை வழங்கப்படும். 25 வகை ரத்த பரிசோதனைகள், ஐந்து இதர பரிசோதனைகள் செய்யப்படும் என்றார்.ஒத்தக்கடை கிழக்கு ஒன்றியம் துவக்கப்பள்ளியில் முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் கலையரங்கு, அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளி, உலகனேரி மாதிரி பெண்கள் மேல்நிலை பள்ளியில் முன்னாள் மாணவர்கள் சார்பில் கட்டப்பட்ட தோரண வாயில்களை அமைச்சர் திறந்தார்.எம்.எல்.ஏ., வெங்கடேசன், சுகாதார துணை இயக்குனர் செந்தில்குமார், முதன்மை கல்வி அலுவலர் சுவாமிநாதன், மாவட்ட ஊராட்சி தலைவர் சூர்யகலா, தலைமையாசிரியர் சுசித்ரா, பி.ஆர்.ஓ., சாலிதளபதி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X