மாநில அளவிலான ரக்பி கால்பந்து| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

மாநில அளவிலான ரக்பி கால்பந்து

Added : நவ 21, 2021
Share
மதுரை -தமிழ்நாடு ரக்பி கால்பந்து சங்கம் சார்பில் மதுரை ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் 2வது மாநில அளவிலான ரக்பி கால்பந்து போட்டிகள் நேற்று தொடங்கின.சீனியர் ஆடவர், மகளிர் மற்றும் ஜூனியர் ஆடவர், மகளிர் பிரிவுகளின் கீழ் அணிகள் பங்கேற்கின்றன. எழுவர் அணியாக விளையாடும் போட்டிகள் நாக்அவுட் முறையில் நடக்கின்றன. சங்க மாநில தலைவர் ராஜ்சத்யன் போட்டிகளை துவக்கி வைத்தார். ரக்பி சர்வதேச

மதுரை -தமிழ்நாடு ரக்பி கால்பந்து சங்கம் சார்பில் மதுரை ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் 2வது மாநில அளவிலான ரக்பி கால்பந்து போட்டிகள் நேற்று தொடங்கின.சீனியர் ஆடவர், மகளிர் மற்றும் ஜூனியர் ஆடவர், மகளிர் பிரிவுகளின் கீழ் அணிகள் பங்கேற்கின்றன. எழுவர் அணியாக விளையாடும் போட்டிகள் நாக்அவுட் முறையில் நடக்கின்றன. சங்க மாநில தலைவர் ராஜ்சத்யன் போட்டிகளை துவக்கி வைத்தார். ரக்பி சர்வதேச வீரர் வெங்கடேஷ், மேம்பாட்டு அலுவலர் ராயல் மேத்யூ கலந்து கொண்டனர். மாவட்ட செயலாளர் மணிகண்டன், தேசிய வீரர்கள் வெங்கடேஷ், நோயல், சங்கர், நடுவர்கள் ஜார்ஜ், ப்ரீத்தி, முகேஷ் குமார் கலந்து கொண்டனர்.நேற்று நடந்த ஜூனியர் மகளிர் பிரிவில் திருவள்ளூர் அணி 30 - 0 என்ற கோல் கணக்கில் தஞ்சாவூர் அணியை வீழ்த்தியது. சென்னை அணி 10 - 0 என்ற கோல் கணக்கில் கடலுார் அணியை வீழ்த்தியது. காஞ்சிபுரம் அணி 5 - 0 என்ற கோல் கணக்கில் மதுரை அணியை வீழ்த்தியது.சென்னை அணி 10 - 0 என்ற கோல் கணக்கில் காஞ்சிபுரம் அணியை வீழ்த்தியது. ஜூனியர் ஆடவர் பிரிவில் வேலுார், புதுக்கோட்டை அணிகள் கோல் எதுவும் அடிக்காமல் சமன் செய்தன. திருவள்ளூர் அணி 10 - 0 என்ற கோல் கணக்கில் தஞ்சாவூர் அணி வீழ்த்தியது. சென்னை அணி 20 - 0 என்ற கோல் கணக்கில் திருவள்ளூர் அணியை வீழ்த்தியது.சீனியர் மகளிர் பிரிவில் திருவள்ளூர் அணி 15 - 0 என்ற கோல் கணக்கில் மதுரை அணியை வீழ்த்தியது. காஞ்சிபுரம், மதுரை அணிகள் கோல் எதுவும் அடிக்காமல் சமன் செய்தன. சீனியர் ஆடவர் பிரிவில் வேலுார் 10 - 5 என்ற கோல் கணக்கில் திருவள்ளூர் அணியை வீழ்த்தியது. இன்று (நவ.,21) இறுதிப்போட்டி நடக்கிறது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X