ஜோ பைடனுக்கு உடல்நலம் பாதிப்பு : ஒன்றரை மணி நேரம் கமால ஹாரிஸ் அதிபராக பதவி வகிப்பு

Updated : நவ 21, 2021 | Added : நவ 21, 2021 | கருத்துகள் (4)
Share
Advertisement
பெதஸ்டா-அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டதால், நேற்று ஒன்றரை மணி நேரத்துக்கு மட்டும் தற்காலிக அதிபராக கமலா ஹாரிஸ் பதவி வகித்தார். இந்தாண்டு ஜனவரியில் அமெரிக்க அதிபராக ஜோ பைடன் பொறுப்பேற்ற பின், முதன் முறையாக முழு உடல் பரிசோதனைக்காக வாஷிங்டன் புறநகரில் உள்ள வால்டர் ரீட் தேசிய ராணுவ மருத்துவ மையத்திற்குச் சென்றார். அங்கு அவருக்கு ஐந்து மணி

பெதஸ்டா-அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டதால், நேற்று ஒன்றரை மணி நேரத்துக்கு மட்டும் தற்காலிக அதிபராக கமலா ஹாரிஸ் பதவி வகித்தார்



latest tamil news


. இந்தாண்டு ஜனவரியில் அமெரிக்க அதிபராக ஜோ பைடன் பொறுப்பேற்ற பின், முதன் முறையாக முழு உடல் பரிசோதனைக்காக வாஷிங்டன் புறநகரில் உள்ள வால்டர் ரீட் தேசிய ராணுவ மருத்துவ மையத்திற்குச் சென்றார். அங்கு அவருக்கு ஐந்து மணி நேரத்திற்கு மேல் முழு உடல் பரிசோதனைகள் செய்யப்பட்டன. ஜோ பைடனுக்கு மயக்க மருந்து கொடுக்கப்பட்டு, 'கலனோஸ்கோபி' எனப்படும் குடல் பரிசோதனை செய்யப்பட்டது. அப்போது தமிழகத்தை பூர்வீகமாக உடைய துணை அதிபர் கமலா ஹாரிஸ், அமெரிக்க அதிபராக செயல்பட்டார்.

இதன் வாயிலாக அமெரிக்க வரலாற்றில் முதன் முறையாக ஒன்றரை மணி நேரம் அதிபராக இருந்த முதல் ஆப்ரிக்க - அமெரிக்க கருப்பர் மற்றும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பெண் என்ற சிறப்பை கமலா பெற்றுள்ளார். இதற்கிடையே உடல் பரிசோதனைகள் முடிந்த பின், ஜோ பைடன் மீண்டும் வெள்ளை மாளிகை வந்து தன் பணிகளை துவக்கினார். நேற்று 78வது பிறந்தநாளை கொண்டாடிய ஜோ பைடன் உடல்நிலை குறித்து அவரது டாக்டர் கெவின் ஓ கானர் அளித்த அறிக்கையை, வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ளது.


latest tamil news


அதில் கூறப்பட்டுள்ளதாவது:ஜோ பைடனுக்கு அஜீரணக் கோளாறு காரணமாக இருமல் ஏற்பட்டுள்ளது. ஓராண்டுக்கு முன் பாத எலும்பில் லேசான முறிவு ஏற்பட்டதால், காலில் சற்று விறைப்புத்தன்மையும் உள்ளது. அவரது குடலில் சிறிய திசுவை அகற்றியுள்ளோம். அதை குடல் புற்றுநோய் என கூற முடியாது. நரம்பு மண்டலத்தை சோதித்ததில் நினைவுத் திறன் குறைபாடு போன்றவை ஏற்பட வாய்ப்பில்லை என்பது தெரியவந்தது.

அவருக்கு சர்க்கரை நோய், ரத்த அழுத்தம் ஆகியவை இல்லை. கைகள் மற்றும் பாதத்தில் மட்டும் நரம்புகள் பலவீனமாக காணப்படுகின்றன. மற்றபடி ஜோ பைடன் ஆரோக்கியத்துடன் அதிபர் பணிகளை திறம்படச் செய்யும் ஆற்றலுடன் திடகாத்திரமாக உள்ளார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
duruvasar - indraprastham,இந்தியா
21-நவ-202107:43:02 IST Report Abuse
duruvasar இட்லிக்கு பெருமை சேர்த்த ஆரிய தமிழருக்கு வாழ்த்துக்கள்.
Rate this:
Girija - Chennai,இந்தியா
21-நவ-202108:07:53 IST Report Abuse
Girijaஆரிய தமிழர்? ஆயா, பாயா கடை தயாரிப்பு ....
Rate this:
Velumani K. Sundaram - Victoria,செசேல்ஸ்
21-நவ-202110:49:30 IST Report Abuse
Velumani K. Sundaramதமிழ்மொழி பேசுறவன்தான் தமிழன். அப்போ நீ என்ன மொழி பேசுறவன்? ஆப்பிரிக்கா தமிழனா?...
Rate this:
Cancel
Girija - Chennai,இந்தியா
21-நவ-202107:35:50 IST Report Abuse
Girija அந்த பாட்டி ஆசாத் காஷ்மீர் பிரச்சனையில் தாலிபான் ஆதரவாக செயல்படவேண்டும் என்று உளறி கொண்டிருக்கிறது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X