பொது செய்தி

இந்தியா

2 வயது குழந்தைக்கு அரிய வகை மரபணு நோய்; ரூ.16 கோடி நிலக்கரி நிறுவனம் உதவி

Updated : நவ 21, 2021 | Added : நவ 21, 2021 | கருத்துகள் (5)
Share
Advertisement
கோர்பா : அரியவகை நோயால் பாதிக்கப்பட்டுள்ள ஊழியரின், 2 வயது மகளுக்கு தேவையான மருந்து வாங்க, 16 கோடி ரூபாயை வழங்கி, நிலக்கரி நிறுவனம் உதவி செய்துள்ளது.சத்தீஸ்கரில் பொதுத் துறை நிறுவனமான எஸ்.இ.சி.எல்., எனப்படும் நிலக்கரி நிறுவனம் இயங்கி வருகிறது. இந்த நிறுவனத்தில் சதிஷ் குமார் ரவி என்பவர் பணியாற்றி வருகிறார். இவரது, 2 வயது மகள், எஸ்.எம்.ஏ., என்ற அரிய வகை மரபணு நோயால்


கோர்பா : அரியவகை நோயால் பாதிக்கப்பட்டுள்ள ஊழியரின், 2 வயது மகளுக்கு தேவையான மருந்து வாங்க, 16 கோடி ரூபாயை வழங்கி, நிலக்கரி நிறுவனம் உதவி செய்துள்ளது.latest tamil newsசத்தீஸ்கரில் பொதுத் துறை நிறுவனமான எஸ்.இ.சி.எல்., எனப்படும் நிலக்கரி நிறுவனம் இயங்கி வருகிறது. இந்த நிறுவனத்தில் சதிஷ் குமார் ரவி என்பவர் பணியாற்றி வருகிறார். இவரது, 2 வயது மகள், எஸ்.எம்.ஏ., என்ற அரிய வகை மரபணு நோயால் பாதிக்கப்பட்டுள்ளார்.

சிறுமியின் மூளைத் தண்டு மற்றும் முதுகெலும்பில் உள்ள நரம்புகள் பாதிக்கப்பட்டுள்ளதால், உடல் தசைகளின் இயக்கத்தை கட்டுப்படுத்த முடியாத நிலை உள்ளது. அவரது சிகிச்சைக்கு, 'ஜோல்ஜென்ஸ்மா' என்ற ஊசி மருந்து செலுத்த வேண்டி உள்ளது.


latest tamil news
அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படவேண்டிய அந்த மருந்தின் விலை, 16 கோடி ரூபாய். இவ்வளவு பணத்தை ஈட்ட முடியாததால் ரவி பெரும் சிரமத்திற்கு ஆளானார். இந்நிலையில் அவருக்கு உதவும் விதமாக, அவர் பணிபுரியும் எஸ்.இ.சி.எல்., நிலக்கரி நிறுவனம், அவருக்கு 16 கோடி ரூபாயை வழங்கியுள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
DVRR - Kolkata,இந்தியா
21-நவ-202118:01:01 IST Report Abuse
DVRR ஓகே இந்த ஊசி வைத்த பிறகு வரும் அடுத்த 58 வருடம் (60 வருடம் ஒருவரது வாழ்க்கை என்றால்) அந்த குழந்தை இறக்காது என்று காரண்டி இந்த ஊசி சப்ளை செய்பவர்கள் கொடுக்க முடியுமா???????இல்லையென்றால் பணம் வாபஸ் செய்யுமா???
Rate this:
Cancel
21-நவ-202116:27:16 IST Report Abuse
சம்பத் குமார் 1). அமெரிக்காவில் இருக்கும் மருத்துவ கம்பெனிகள் என்ன மிருகங்களா என்ன?? World health organization இந்த மாதிரி விஷயங்களில் என்ன பண்ணுகிறது???2). ஒரு குழந்தையின் நோய்க்கு இவ்வளவு விலை அதிகம் கொடுத்து மருந்து விற்பார்களா என்ன???3). என்ன மனிதர்களோ என்ன மேல்நாட்டு நாகரிகம். இயேசு பிரான் வந்து இவர்களுக்கு புத்தி மதி வழங்க வேண்டும். நாம் சொன்னால் கேட்க மாட்டார்கள்.4). நிற்க. இது நிலக்கரி சுரங்கத்தில் உள்ள மாசுக்கள் பிரச்சனையால் வந்தாதா எனத் தெரியவில்லை.5). சும்மா 16 கோடி இந்த காலத்தில் எப்படி சாத்தியம்???6). அப்படி உண்மையெனில் அங்கு அந்த நிலக்கரி சுரங்கத்தில் வேலை செய்பவர்கள் நமக்காக தங்களது வாழ்கை மற்றும் தங்களது வருங்கால சந்ததியை தொலைக்கிறார்களா??? 7). ஒன்றும் புரியவில்லை. மனசாட்சி உள்ள இறைவனேக்கு வெளிச்சம். நன்றி வணக்கம் ஐயா.
Rate this:
Cancel
21-நவ-202110:34:12 IST Report Abuse
ஆரூர் ரங் பணி நேர விபத்தில் மரணமடைந்த ஊழியர்களுக்கு கூட இதில் ஐந்து😶 சதவீதம்தான் கிடைக்கிறது. நாடுமுழுவதும் இது போல பாதிக்கப்படும் லட்சம் குழந்தைகளுக்கும் இதுபோன்ற உதவி அளிக்க அரசால் இயலுமா? 🤔சிந்திக்க.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X