2 வயது குழந்தைக்கு அரிய வகை மரபணு நோய்; ரூ.16 கோடி நிலக்கரி நிறுவனம் உதவி| Dinamalar

பொது செய்தி

இந்தியா

2 வயது குழந்தைக்கு அரிய வகை மரபணு நோய்; ரூ.16 கோடி நிலக்கரி நிறுவனம் உதவி

Updated : நவ 21, 2021 | Added : நவ 21, 2021 | கருத்துகள் (5)
Share
கோர்பா : அரியவகை நோயால் பாதிக்கப்பட்டுள்ள ஊழியரின், 2 வயது மகளுக்கு தேவையான மருந்து வாங்க, 16 கோடி ரூபாயை வழங்கி, நிலக்கரி நிறுவனம் உதவி செய்துள்ளது.சத்தீஸ்கரில் பொதுத் துறை நிறுவனமான எஸ்.இ.சி.எல்., எனப்படும் நிலக்கரி நிறுவனம் இயங்கி வருகிறது. இந்த நிறுவனத்தில் சதிஷ் குமார் ரவி என்பவர் பணியாற்றி வருகிறார். இவரது, 2 வயது மகள், எஸ்.எம்.ஏ., என்ற அரிய வகை மரபணு நோயால்


கோர்பா : அரியவகை நோயால் பாதிக்கப்பட்டுள்ள ஊழியரின், 2 வயது மகளுக்கு தேவையான மருந்து வாங்க, 16 கோடி ரூபாயை வழங்கி, நிலக்கரி நிறுவனம் உதவி செய்துள்ளது.



latest tamil news



சத்தீஸ்கரில் பொதுத் துறை நிறுவனமான எஸ்.இ.சி.எல்., எனப்படும் நிலக்கரி நிறுவனம் இயங்கி வருகிறது. இந்த நிறுவனத்தில் சதிஷ் குமார் ரவி என்பவர் பணியாற்றி வருகிறார். இவரது, 2 வயது மகள், எஸ்.எம்.ஏ., என்ற அரிய வகை மரபணு நோயால் பாதிக்கப்பட்டுள்ளார்.

சிறுமியின் மூளைத் தண்டு மற்றும் முதுகெலும்பில் உள்ள நரம்புகள் பாதிக்கப்பட்டுள்ளதால், உடல் தசைகளின் இயக்கத்தை கட்டுப்படுத்த முடியாத நிலை உள்ளது. அவரது சிகிச்சைக்கு, 'ஜோல்ஜென்ஸ்மா' என்ற ஊசி மருந்து செலுத்த வேண்டி உள்ளது.


latest tamil news




அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படவேண்டிய அந்த மருந்தின் விலை, 16 கோடி ரூபாய். இவ்வளவு பணத்தை ஈட்ட முடியாததால் ரவி பெரும் சிரமத்திற்கு ஆளானார். இந்நிலையில் அவருக்கு உதவும் விதமாக, அவர் பணிபுரியும் எஸ்.இ.சி.எல்., நிலக்கரி நிறுவனம், அவருக்கு 16 கோடி ரூபாயை வழங்கியுள்ளது.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X