தமிழ்நாடு

ஆற்று வெள்ளத்தால் சாலை, பாலங்கள் உடைப்பு! போக்குவரத்து முடங்கியதால் படகில் பயணம்

Added : நவ 21, 2021
Share
Advertisement
வடகிழக்கு பருவ மழையால், கொசஸ்தலை, நந்தி மற்றும் ஆரணி ஆறுகளில் ஏற்பட்ட வெள்ளத்தாலும், தேசிய, மாநில நெடுஞ்சாலைகளில், தரைப்பாலங்கள் அடித்து செல்லப்பட்டதால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் சிரமப்படுவதுடன், பொதுமக்கள் படகுகளில் ஆபத்தாக பயணம் செய்கின்றனர்.வடகிழக்கு பருவ மழையால், கடந்த 3ம் தேதி முதல், திருவள்ளூர் மாவட்டம் முழுதும் தொடர்ந்து
ஆற்று வெள்ளத்தால் சாலை, பாலங்கள்  உடைப்பு!  போக்குவரத்து முடங்கியதால் படகில் பயணம்

வடகிழக்கு பருவ மழையால், கொசஸ்தலை, நந்தி மற்றும் ஆரணி ஆறுகளில் ஏற்பட்ட வெள்ளத்தாலும், தேசிய, மாநில நெடுஞ்சாலைகளில், தரைப்பாலங்கள் அடித்து செல்லப்பட்டதால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.

இதனால் வாகன ஓட்டிகள் கடும் சிரமப்படுவதுடன், பொதுமக்கள் படகுகளில் ஆபத்தாக பயணம் செய்கின்றனர்.வடகிழக்கு பருவ மழையால், கடந்த 3ம் தேதி முதல், திருவள்ளூர் மாவட்டம் முழுதும் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.

அவ்வப்போது மிக கன மழை கொட்டியதால் ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. மேலும், ஏரி, குளங்கள் நிரம்பி, அதன் உபரி நீர் வெளியேறுவதால் சாலைகள் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் வெள்ளம் புகுந்தது.தடுப்பு கட்டைதவிர ஆந்திர மாநிலம், அம்மப்பள்ளி அணைக்கட்டில் இருந்து இரவில் 1,000 - 4,000 கனஅடி நீர் திறந்து விடப்பட்டதால், கொசஸ்தலை ஆற்றில் அதிகளவில் வெள்ளம்பெருக்கெடுத்து ஓடியது.

இந்த தண்ணீர் பூண்டி நீர்த்தேக்கத்திற்கு வந்ததால், அணையின் முழு கொள்ளளவு எட்டி உபரி நீர், 35 ஆயிரம் கன அடி நீர் வரை திறந்து விடப்பட்டதால், ஆரணி ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.அதேபோல், பொன்னை அணைக்கட்டில் இருந்து உபரி நீர் திறந்து விட்டதால் சோளிங்கர், திருத்தணி வழியாக பூண்டி ஏரிக்கு செல்லும் நந்தியாற்றிலும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.பூண்டி நீர்த்தேக்கத்தில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீரால், திரு வள்ளூர் - ஊத்துக்கோட்டை செல்லும் மாநில நெடுஞ்சாலை ஒதப்பை தரைப்பாலம் வெள்ளத்தால் அடித்துச் செல்லப்பட்டு, போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்பட்டது.

பாலத்தில் இருந்த தார் சாலை பெயர்ந்தது. தரைப்பாலம் அருகே பென்னலுார்பேட்டை போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். திருவள்ளூரில் இருந்து, ஊத்துக்கோட்டை நோக்கி செல்லும் வாகனங்களை, கலெக்டர் அலுவலகம் அருகே தடுப்பு கட்டைகள் அமைத்து, போலீசார் திருப்பி அனுப்புகின்றனர்.அதேபோல், சென்னை - திருப்பதி நெடுஞ்சாலை நாராயணபுரம் அருகே, கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட தரைப்பாலம் வெள்ளத்தால் அடித்து செல்லப்பட்டதால், அங்கும் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.5.5 அடி உயரம்திருத்தணியில் இருந்து, திருவள்ளூர், சென்னை நோக்கி செல்லும் வாகனங்களை கனகம்மாசத்திரம் - திருவாலங்காடு கூட்டுச்சாலை அருகே, போலீசார் தடுப்புகள் அமைத்து, திருவாலங்காடு வழியாக, திரும்பி அனுப்புகின்றனர். திருத்தணி - பொதட்டூர்பேட்டை செல்லும் முதன்மை மாநில நெடுஞ்சாலையில் எம்.ஜி.ஆர்., நகர் பகுதியில் செல்லும் நந்தியாற்றின் தரைப்பாலத்தின் மீது 5.5 அடி உயரத்திற்கு மேல் வெள்ளம் செல்வதால், போக்குவரத்து நிறுத்தம் செய்யப்பட்டது.

இப்படி, மாவட்டம் முழுதும் பல்வேறு இடங்களில் வெள்ளத்தால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டு உள்ளது.படகு போக்குவரத்துகொசஸ்தலை ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால் தரைப்பாலம் மூழ்கியதை தொடர்ந்து படகு போக்குவரத்து துவங்கப்பட்டு உள்ளது.ஆற்றில் நீர்வரத்து அதிகரித்ததை தொடர்ந்து, மீஞ்சூர் -- சுப்பாரெட்டிப்பாளையம் இடையே இருந்த தரைப்பாலம் தண்ணீரில் மூழ்கி, போக்குவரத்து ஸ்தம்பித்தது.

சுப்பாரெட்டிபாளையம், பள்ளிபுரம் கிராமங்களுக்கு போக்குவரத்து துண்டிக்கப்பட்டதால், கிராமவாசிகள் சிரமத்திற்கு ஆளாகினர்.அத்தியாவசிய தேவைகளுக்கு கிராம மக்கள் மீஞ்சூர் வந்து செல்வதற்காக, படகு போக்குவரத்து தொடங்கப்பட்டு உள்ளது. 'லைப் ஜாக்கெட்' அணிவிக்கப்பட்டு கிராம மக்களை பாதுகாப்பாக ஒரு கரையில் இருந்து மறுகரைக்கு படகு மூலம் அழைத்து செல்லப்படுகின்றனர்.அச்சத்தில் கிராம மக்கள்சோழவரம் அடுத்த, நெற்குன்றம், கண்ணியம்பாளையம், புதுகுப்பம், சீமாவரம் பகுதிகளில் கரைகளை தொட்டு வெள்ள நீர் ஓடுகிறது.விளை நிலங்களில் இருந்து மழை நீர் வடிந்து, ஆற்றிற்கு செல்லும் கால்வாய்கள் வழியாக கிராமங்களுக்குள் புகும் சூழல் ஏற்பட்டு உள்ளது.

இதனால் கிராமவாசிகள் ஆற்றின் கரைகளை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.பலவீனமாக உள்ள கரைகளில் மணல் மூட்டைகள் போடப்பட்டு வருகின்றனர். 2015ல் ஏற்பட்டதுபோல் கரைகள் உடைந்து விடுமோ என்ற அச்சத்தில் மேற்கண்ட கிராமமக்கள் உள்ளனர். திருவள்ளூர் கலெக்டர் அல்பி ஜான் வர்கீஸ் மற்றும் அதிகாரிகள் தொடர்ந்து அங்கு ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

-நமது நிருபர் குழு -

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X