பொது செய்தி

தமிழ்நாடு

வடகிழக்கு பருவ மழையால் 1,000 கோழி, 116 மாடு பலி

Added : நவ 21, 2021
Share
Advertisement
திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டத்தில் பெய்து வரும் வடகிழக்கு பருவ மழையால், 116 மாடுகள், 1,000 கோழிகள் இறந்துள்ளன.திருவள்ளூர் மாவட்டத்தில், வடகிழக்கு பருவ மழையால், மாவட்டத்தில் உள்ள, 1,155 ஏரிகளில், 775 ஏரிகள் நுாறு சதவீதம் நிரம்பி விட்டன. 257 ஏரிகள், 75 சதவீதமும், 107 ஏரிகள், 50 சதவீதமும், 16 ஏரிகள், 50 - 25 சதவீதத்திற்குள்ளும் நிரம்பி உள்ளன.பூண்டி நீர்த்தேக்கம்சென்னையின் குடிநீர் தேவையை

திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டத்தில் பெய்து வரும் வடகிழக்கு பருவ மழையால், 116 மாடுகள், 1,000 கோழிகள் இறந்துள்ளன.திருவள்ளூர் மாவட்டத்தில், வடகிழக்கு பருவ மழையால், மாவட்டத்தில் உள்ள, 1,155 ஏரிகளில், 775 ஏரிகள் நுாறு சதவீதம் நிரம்பி விட்டன. 257 ஏரிகள், 75 சதவீதமும், 107 ஏரிகள், 50 சதவீதமும், 16 ஏரிகள், 50 - 25 சதவீதத்திற்குள்ளும் நிரம்பி உள்ளன.

பூண்டி நீர்த்தேக்கம்சென்னையின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும், பூண்டி நீர்த்தேக்கத்திற்கு, தற்போது, வினாடிக்கு, 29 ஆயிரத்து, 719 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. நீர்த்தேக்கத்தில், 2.95 டி.எம்.சி., தண்ணீர் நிரம்பி உள்ளதால், வினாடிக்கு, 29 ஆயிரத்து, 719 கன அடி வீதம் தண்ணீர், கொற்றலை ஆற்றில் திறந்து விடப்பட்டு உள்ளது.

இதன் காரணமாக, திருவள்ளூர் - ஊத்துக்கோட்டை சாலையில், ஒதப்பை தரைப்பாலத்தை மூழ்கடிக்கும் வகையில், தண்ணீர் சென்று கொண்டிருக்கிறது. திருவள்ளூர் - ஊத்துக்கோட்டை போக்குவரத்து துண்டிக்கப்பட்டு உள்ளது.கால்நடைகள் பலிதொடர் மழையால், மாவட்டத்தில் இதுவரை, வெள்ளத்தில் சிக்கி இரண்டு பேர் இறந்து உள்ளனர். மேலும், 116 மாடுகள், 1,000 கோழிகள் இறந்துள்ளன. மேலும், 1,430 வீடுகள் சேதமடைந்து உள்ளன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X