சம்பவம் செய்தி

தமிழ்நாடு

அணைக்கட்டில் குதித்ததாக நாடகம்; உறவினர் வீட்டில் தாய், மகள் தஞ்சம்

Added : நவ 21, 2021
Share
Advertisement
ஊத்துக்கோட்டை : தாமரைப்பாக்கம் அணைக்கட்டில் குதித்ததாக நாடகம் ஆடிய, தாய், மகளை போலீசார் அவர்களின் உறவினர் வீட்டில் இருந்ததை கண்டுபிடித்தனர்.எல்லாபுரம் ஒன்றியம், புன்னப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் நிரோஷா, 38. இவருக்கு பத்மினி, 10; வினிதா, 8, என்ற இரு மகள்கள் உள்ளனர். இவரது கணவர் விஜயகுமார் இறந்து விட்டார். இவரது மூத்த மகளை, தன் பெற்றோர் வீட்டில் விட்டுள்ளார்.கடந்த 16ம்

ஊத்துக்கோட்டை : தாமரைப்பாக்கம் அணைக்கட்டில் குதித்ததாக நாடகம் ஆடிய, தாய், மகளை போலீசார் அவர்களின் உறவினர் வீட்டில் இருந்ததை கண்டுபிடித்தனர்.

எல்லாபுரம் ஒன்றியம், புன்னப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் நிரோஷா, 38. இவருக்கு பத்மினி, 10; வினிதா, 8, என்ற இரு மகள்கள் உள்ளனர். இவரது கணவர் விஜயகுமார் இறந்து விட்டார். இவரது மூத்த மகளை, தன் பெற்றோர் வீட்டில் விட்டுள்ளார்.கடந்த 16ம் தேதி இரவு, நிரோஷா, மகள் வினிதாவுடன் தாமரைப்பாக்கம் அணைக்கட்டிற்கு பைக்கில் சென்றார்.அங்கு பைக்கை நிறுத்திய பின் இருவரும் அணைக்கட்டின் உள்ளே சென்றனர்.

இதை அங்கிருந்தவர் பார்த்து வெங்கல் போலீசுக்கு தகவல் கொடுத்தார்.மறுநாள் தேர்வாய் சிப்காட் தீயணைப்புத் துறையினர் வெள்ள நீரில் தீவிரமாக தேடினர். ஆனால் இருவரும் கிடைக்கவில்லை. வெங்கல் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வந்தனர்.இந்நிலையில், நேற்று, திருமழிசை பகுதியில் உள்ள உறவினர் வீட்டில் நிரோஷா இருப்பதாக போலீசுக்கு தகவல் கிடைத்தது. போலீசார் அங்கு சென்று பார்த்தபோது தாய், மகள் இருவரும் இருந்தது தெரிந்தது.

இதுகுறித்து நிரோஷா கூறுகையில், 'பூ வியாபாரம் செய்து வரும் தன்னால், வாங்கிய கடனை திருப்பி தர முடியவில்லை. இதனால் இறந்ததாக நாடகம் ஆடியதாக' கூறியுள்ளார்.தாய், மகளை மீட்ட போலீசார், அவர்களின் வீட்டிற்கு அழைத்து சென்று விட்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X