கணவரை உயிரோடு புதைத்தாரா மனைவி? மகள் புகாரால் பெரும்பாக்கத்தில் பரபரப்பு!.| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கணவரை உயிரோடு புதைத்தாரா மனைவி? மகள் புகாரால் பெரும்பாக்கத்தில் பரபரப்பு!.

Added : நவ 21, 2021
Share
சென்னை : ஜீவ சமாதி அடைந்ததாக கூறப்படும் குறி சொல்பவர் உடல், தாசில்தார் முன்னிலையில் தோண்டி எடுக்கப்பட்டது. முன்னுக்கு பின் முரணாக பதில் கூறும் மனைவியிடம், போலீசார் தீவிர விசாரணை நடத்துகின்றனர்.சென்னை, பெரும்பாக்கம், கலைஞர் நகர், 8வது தெருவைச் சேர்ந்தவர் நாகராஜ், 58. இவரது மனைவி லட்சுமி, 45. இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.மகன் துபாயில் பணிபுரிகிறார். மகள் தமிழரசி, 24,

சென்னை : ஜீவ சமாதி அடைந்ததாக கூறப்படும் குறி சொல்பவர் உடல், தாசில்தார் முன்னிலையில் தோண்டி எடுக்கப்பட்டது. முன்னுக்கு பின் முரணாக பதில் கூறும் மனைவியிடம், போலீசார் தீவிர விசாரணை நடத்துகின்றனர்.

சென்னை, பெரும்பாக்கம், கலைஞர் நகர், 8வது தெருவைச் சேர்ந்தவர் நாகராஜ், 58. இவரது மனைவி லட்சுமி, 45. இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.மகன் துபாயில் பணிபுரிகிறார். மகள் தமிழரசி, 24, சோழிங்கநல்லுாரில் உள்ள ஒரு ஐ.டி., நிறுவனத்தில் பணிபுரிகிறார். நாகராஜ், குறி சொல்லி சாமி ஆடி வந்துள்ளார்.கடந்த 17ம் தேதி நாகராஜிக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அப்போது, 'நான் இறந்து விடுவேன்; வீட்டின் கொல்லை புறத்தில் குழிதோண்டி ஜீவ சமாதியாக புதைக்க வேண்டும். பிள்ளைகளுக்கு தெரிய வேண்டாம்' என நாகராஜ், லட்சுமியிடம் சத்தியம் வாங்கியதாக கூறப்படுகிறது.

பரிசோதனைஏற்கனவே தோண்டிய குழியில் நாகராஜ் படுக்க, லட்சுமி மண்ணை மூடி சமாதி ஆக்கியதாக கூறப்படுகிறது. பணிக்கு சென்று திரும்பிய தமிழரசி, தந்தை குறித்து கேட்டுள்ளார்.அவர் வெளியே சென்றதாக, லட்சுமி கூறி உள்ளார். மறுநாள் வரை வீடு திரும்பாததால், தாயிடம் கோபமாக கேட்டுள்ளார். அப்போது, தந்தை ஜீவ சமாதி அடைந்ததாக, லட்சுமி கூறி உள்ளார்.சந்தேகமடைந்த தமிழரசி, நேற்று முன்தினம் இரவு, பெரும்பாக்கம் போலீசில் புகார் அளித்தார்.

போலீசார் நேற்று தாம்பரம் தாசில்தார் பாலாஜி, அரசு மருத்துவர் நாகநந்தினி மற்றும் போலீசார் முன்னிலையில், நாகராஜ் உடலை தோண்டி எடுத்து, பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர்.போலீசார் லட்சுமியிடம் தீவிர விசாரணை நடத்தினர். அவர், முன்னுக்கு பின் முரணாக பதில் கூறி வந்தார். இதனால் பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பின், அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என, போலீசார் தெரிவித்தனர். இந்த சம்பவம், அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X