பொது செய்தி

தமிழ்நாடு

திருத்தணி கோவில் சரவணபொய்கை குளம் நிரம்பியது 

Added : நவ 21, 2021
Share
Advertisement
திருத்தணி : முருகன் கோவிலின் சரவணபொய்க்கை திருக்குளம் கடந்த, 6 ஆண்டுகளுக்கு பின் தொடர்மழையால் நிரம்பி வழிகிறது.திருத்தணி முருகன் மலைக்கோவிலுக்கு படிகள் செல்லும் வழியில் சரவணபொய்கை என்கிற திருக்குளம் உள்ளது. இந்த குளத்திற்கு மலைக்கோவில் மற்றும் பச்சரிசி மலையில் இருந்து தண்ணீர் வருகிறது. இந்நிலையில் கடந்த, 15 நாட்களுக்கு மேலாக திருத்தணி நகரில் பெய்த மழையால்
திருத்தணி கோவில் சரவணபொய்கை குளம் நிரம்பியது 

திருத்தணி : முருகன் கோவிலின் சரவணபொய்க்கை திருக்குளம் கடந்த, 6 ஆண்டுகளுக்கு பின் தொடர்மழையால் நிரம்பி வழிகிறது.

திருத்தணி முருகன் மலைக்கோவிலுக்கு படிகள் செல்லும் வழியில் சரவணபொய்கை என்கிற திருக்குளம் உள்ளது. இந்த குளத்திற்கு மலைக்கோவில் மற்றும் பச்சரிசி மலையில் இருந்து தண்ணீர் வருகிறது. இந்நிலையில் கடந்த, 15 நாட்களுக்கு மேலாக திருத்தணி நகரில் பெய்த மழையால் திருக்குளத்திற்கு வரும் தண்ணீர் நாளுக்கு நாள் அதிகரித்து வந்தது.

இந்நிலையில் நேற்று திருக்குளம் முழுவதும் நிரம்பி வழிந்தன. அதன் உபரிநீர் மடம் கிராமம் வழியாக வெளியேறி திருத்தணி சித்தேரி மற்றும் நந்தியாற்றிக்கு செல்கிறது. கடந்த, ஆறு ஆண்டுகளுக்கு பின் தற்போது நிரம்பி வழியும் திருக்குளத்தை பக்தர்கள் ஆர்வத்துடன் பார்த்து மகிழ்ந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X