போலீஸ் டைரி

Added : நவ 21, 2021
Share
Advertisement
விபத்துகளில் இருவர் பலிதிருத்தணி: திருத்தணி ஒன்றியம், பீரகுப்பம் வட்டார சுகாதார மேற்பார்வையாளராக பணியாற்றி வந்தவர், சம்பத், 47. இவர், கடந்த, 14ம் தேதி நடந்த மெகா தடுப்பூசி முகாமை கண்காணிக்க, திருத்தணி, கோரமங்கலம், கே.ஜி.கண்டிகை, தெக்களூர், இஸ்லாம்நகர் உள்ளிட்ட இடங்களுக்கு, இருசக்கர வாகனத்தில் சென்று ஆய்வு செய்தார்.அப்போது, தெக்களூர் பகுதியில் நடந்த முகாமை ஆய்வு செய்த

விபத்துகளில் இருவர் பலி
திருத்தணி: திருத்தணி ஒன்றியம், பீரகுப்பம் வட்டார சுகாதார மேற்பார்வையாளராக பணியாற்றி வந்தவர், சம்பத், 47. இவர், கடந்த, 14ம் தேதி நடந்த மெகா தடுப்பூசி முகாமை கண்காணிக்க, திருத்தணி, கோரமங்கலம், கே.ஜி.கண்டிகை, தெக்களூர், இஸ்லாம்நகர் உள்ளிட்ட இடங்களுக்கு, இருசக்கர வாகனத்தில் சென்று ஆய்வு செய்தார்.


அப்போது, தெக்களூர் பகுதியில் நடந்த முகாமை ஆய்வு செய்த சம்பத், இருசக்கர வாகனத்தில், திருத்தணி நோக்கி வந்துக் கொண்டிருந்தார். அப்போது பாபிரெட்டிப்பள்ளி அருகே எதிரே வந்த மற்றொரு இருசக்கர வாகனம் மோதியது.

இதில், சம்பத், காயமடைந்தது, சென்னை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு, அவர் நேற்று மதியம் இறந்தார். திருத்தணி போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.l காஞ்சிபுரம் மாவட்டம், சோகன்டி கிராமத்தில் வசித்து வருபவர் கன்னியப்பன் மகன் அன்புராஜ், 38. தனியார் தொழிற்சாலைக்கு பணியாட்களை அனுப்பும் ஒப்பந்ததாரர்.

இவர், கடந்த 18ம் தேதி, நண்பர்களுடன் அருகில் உள்ள பீமாவரம் ஏரியில் மீன்பிடிக்க சென்றுள்ளார். இதில், ஏரி நீரில் தவறி விழுந்து அன்புராஜ் மூழ்கினார். இவரது நண்பர்கள் அவரை மீட்டு, சுங்குவார்சத்திரம் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது அவர் இறந்து விட்டதாக கூறினர்.

இந்நிலையில் பக்கத்து வீட்டில் வசிக்கும் பிரியா என்பவர், உமாமகேஸ்வரியிடம், உன் கணவர் இறந்து விட்டதாக கூறியுள்ளார். மனைவி உமாமகேஸ்வரி, மருத்துவமனையில் விசாரித்த போது அவரது உடல் ஸ்ரீபெரும்புதுார் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X