சம்பவம் செய்தி

தமிழ்நாடு

திருத்தணி கோவிலில் 'கோல்மால்' ஊழியர் மயிலாப்பூருக்கு மாற்றம்

Added : நவ 21, 2021
Share
Advertisement
திருத்தணி : திருத்தணி முருகன் கோவிலில் இடைத்தரகர் கூட்டு மற்றும் பணம் பெற்று சிறப்பு தரிசனம் செய்தது தொடர்பாக, மீண்டும் ஓர் ஊழியர், மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலுக்கு மாற்றப்பட்டார்.திருத்தணி முருகன் மலைக்கோவிலுக்கு வரும் பக்தர்களிடம், இடைத்தரகர்கள் குறிப்பிட்ட தொகை பெற்று, சில கோவில் ஊழியர்கள் உதவியுடன், சிறப்பு வழியில் அழைத்து சென்று, மூலவர் முன் அமர்த்தி

திருத்தணி : திருத்தணி முருகன் கோவிலில் இடைத்தரகர் கூட்டு மற்றும் பணம் பெற்று சிறப்பு தரிசனம் செய்தது தொடர்பாக, மீண்டும் ஓர் ஊழியர், மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலுக்கு மாற்றப்பட்டார்.

திருத்தணி முருகன் மலைக்கோவிலுக்கு வரும் பக்தர்களிடம், இடைத்தரகர்கள் குறிப்பிட்ட தொகை பெற்று, சில கோவில் ஊழியர்கள் உதவியுடன், சிறப்பு வழியில் அழைத்து சென்று, மூலவர் முன் அமர்த்தி தரிசனம் செய்ய வைப்பதாக புகார் எழுந்தது.இது குறித்து விசாரித்து அறிக்கை அனுப்பும்படி, ஹிந்து சமய அறநிலையத் துறை ஆணையர் குமரகுருபரன், கோவில் நிர்வாக ஆய்வாளர்களுக்கு உத்தரவிட்டார்.அவர்கள், கோவிலில் நேரடி ஆய்வு செய்து, மேற்கண்ட சம்பவங்கள் உண்மை என, ஆணையருக்கு அறிக்கை அனுப்பினர்.

அதன் அடிப்படையில் ஆணையர் குமரகுருபரன், கோவில் உதவியாளர் வேலுவை நேற்று முன்தினம், திருவேற்காடு தேவி கருமாரியம்மன் கோவிலுக்கு இடமாற்றம் செய்தார்.தொடர்ந்து, முருகன் கோவில் எலக்ட்ரீஷியன் குமாரை, மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலுக்கு, ஆணையர் நேற்று இடமாற்றம் செய்துள்ளார்.இன்னும் ஐந்து கோவில் ஊழியர்களையும், இடமாற்றம் செய்வதற்கு வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.துணியால் கேமரா மறைப்பு: அர்ச்சகர்களிடம் விசாரணைதிருத்தணி மலைக்கோவிலில், 'சிசிடிவி' கேமராக்களை அர்ச்சகர்கள் இருவர் மறைக்கும் வீடியோ, சமூக வலைதளங்களில் பரவியது.

கோவில் இணை ஆணையர் பரஞ்ஜோதி, கேமராக்களை துணியால் மூடிய இரு அர்ச்சகர்களை வரவழைத்து, நடந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தினார். முதற்கட்ட விசாரணையில், கந்தசஷ்டி விழாவின்போது, பச்சாரி பூஜைக்காக வழக்கம்போல் ஒன்றரை மணி நேரம் கேமராவை மூடியதாக, அர்ச்சகர்கள் கூறியுள்ளனர். கோவிலில், 150 மற்றும் 100 ரூபாய் சிறப்பு தரிசன டிக்கெட் கவுன்டரில் தலா ஒரு கேமரா; கொடிமரம், வள்ளி, தெய்வானை சன்னதி, மூலவர் வாசல் உட்பட மொத்தம் 56 கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இதில் சமூக வலைதளத்தில் அர்ச்சகர் துணியால் மூடப்படும் கேமரா இருக்கும் இடம், தெய்வானை சன்னிதி அருகே ஆகும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X