பொது செய்தி

இந்தியா

'டிஜிட்டல்' மயமாகும் கல்வி துறை

Added : நவ 21, 2021
Share
Advertisement
பெங்களூரு : கல்வித்துறை உட்பட பல துறை பதிவுகளையும் டிஜிட்டல் மயமாக்குவதற்கான நடவடிக்கையில் மாநில அரசு தீவிரம் காட்டி வருகிறது.கர்நாடக அரசின் துறைகளை டிஜிட்டல் மயமாக்குதலின் முதல் கட்டமாக கல்வித்துறை மற்றும் வேலைவாய்ப்பு துறையின் சான்றிதழ்களின் சரிபார்ப்பு பணிகள் டிஜிட்டலாக மாற்றப்பட்டு வருகிறது.மத்திய அரசின் 'டிஜிலாக்கர்' என்ற செயலி மூலமாக, 2019 முதல் 2021

பெங்களூரு : கல்வித்துறை உட்பட பல துறை பதிவுகளையும் டிஜிட்டல் மயமாக்குவதற்கான நடவடிக்கையில் மாநில அரசு தீவிரம் காட்டி வருகிறது.கர்நாடக அரசின் துறைகளை டிஜிட்டல் மயமாக்குதலின் முதல் கட்டமாக கல்வித்துறை மற்றும் வேலைவாய்ப்பு துறையின் சான்றிதழ்களின் சரிபார்ப்பு பணிகள் டிஜிட்டலாக மாற்றப்பட்டு வருகிறது.

மத்திய அரசின் 'டிஜிலாக்கர்' என்ற செயலி மூலமாக, 2019 முதல் 2021 வரையிலான 2.8 கோடி மாணவர்களின் மதிப்பெண் மற்றும் மாற்று சான்றிதழ் உட்பட கல்வி தொடர்பான அனைத்து பதிகளையும் 80க்கும் அதிகமான கல்வி நிறுவனங்களிலிருந்து பெற்று மாநில அரசு பதிவேற்றம் செய்துள்ளது.உயர்துவக்க நிலை வகுப்பிலிருந்து துவங்கி, உயர்கல்வி வரையிலும் இந்த பதிவுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இந்த இணைப்பு இருப்பதால் வேலைவாய்ப்புக்கான சான்றிதழ் சரிபார்ப்பை முதல் முறையாக டிஜிட்டல் முறையில் செயல்படுத்துவதற்கும் அரசு முக்கியத்துவம் அளித்து வருகிறது.டிஜிலாக்கர் செயலி திட்ட இயக்குனர் ஸ்ரீவாஸ் கூறியதாவது:அலுவலர்களின் சான்றிதழ் சரிபார்ப்பதற்கென கர்நாடக அரசின் 49 துறைகள், இந்த செயலியில் இணைக்கப்பட்டுள்ளன. தனியார் துறைகளுக்கான சேவை அளிப்பதற்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கல்வித்துறை தொடர்பான ஆவணங்களில், டிஜிட்டல் முறையில் கையெழுத்து போடுவதற்கான வசதிகளும் செய்யப்பட்டு வருகிறது.இதன் மூலம் பல துறைகளிலும் போலி சான்றிதழ் சமர்பிப்பது தவிர்க்கலாம்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X