பொது செய்தி

இந்தியா

தொடர் மழையால் காய்கறி விலை கிடுகிடு உயர்வு

Added : நவ 21, 2021
Share
Advertisement
பெங்களூரு : இடைவிடாத மழையால், மக்களை பல்வேறு நோய்கள் வாட்டி வதைக்கும் நிலையில், அன்றாட தேவையான காய்கறிகள், கீரைகளின் விலை கிடுகிடுவென அதிகரித்து, நெருக்கடியை அதிகரிக்கிறது.கர்நாடகாவின் பல மாவட்டங்களில் தொடர் மழை பெய்வதால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிப்படைந்துள்ளது. குளிர்ச்சி அதிகரிப்பதால் நோய்கள் ஏற்படுகிறது.வயல், தோட்டங்களில் தண்ணீர்

பெங்களூரு : இடைவிடாத மழையால், மக்களை பல்வேறு நோய்கள் வாட்டி வதைக்கும் நிலையில், அன்றாட தேவையான காய்கறிகள், கீரைகளின் விலை கிடுகிடுவென அதிகரித்து, நெருக்கடியை அதிகரிக்கிறது.

கர்நாடகாவின் பல மாவட்டங்களில் தொடர் மழை பெய்வதால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிப்படைந்துள்ளது. குளிர்ச்சி அதிகரிப்பதால் நோய்கள் ஏற்படுகிறது.வயல், தோட்டங்களில் தண்ணீர் தேங்கியுள்ளதால் காய்கறிகள், கீரைகள் அழுகி பாழானது. அறுவடைக்கு தயார் நிலையில் இருந்த விளைச்சலை இழந்து, விவசாயிகள் பரிதவிக்கின்றனர். மற்றொரு பக்கம் வரத்து குறைந்ததால் காய்கறிகளின் விலை ஏறுமுகமாக உள்ளது.

வெங்காயம், தக்காளி, பீன்ஸ், கேரட், குட மிளகாய், முருங்கைக்காய், புடலங்காய் என, பல காய்கறிகளின் விலை அதிகரித்துள்ளது.முதன் முறையாக, கத்தரிக்காய், வெண்டைக்காய், பீர்க்கங்காய் உட்பட சில காய்கறிகளின் விலை 100 ரூபாயை எட்டுகிறது.வெந்தய கீரை, அரக்கீரை, சிறுகீரை, பாலக்கீரை, கொத்துமல்லி என மற்ற கீரைகளின் விலையும் கூட மக்களின் கைக்கெட்டும்படி இல்லை.

கார்த்திகை மாதம் என்பதால், அனைத்து இடங்களில் திருமணம், கிரஹ பிரவேசம், நிச்சயதார்த்தம், குழந்தைகளுக்கு பெயர் சூட்டல் போன்ற சுப நிகழ்ச்சிகள் நடக்கிறது.கோவில்களிலும் சிறப்பு பூஜைகள், அன்னதானம் நடப்பதால், காய்கறிகளின் தேவை அதிகரித்துள்ளது. தேவைக்கு தக்கபடி, வரத்து இல்லாததும், விலை உயர்வுக்கு காரணம்.மழை இது போன்று நீடித்தால் விலை மேலும் அதிகரிக்கும் என வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X