தமிழ்நாடு

வெள்ளத்தில் 2 நாட்களாக சிக்கி தவித்த தம்பதி மீட்பு

Added : நவ 21, 2021
Share
Advertisement
செஞ்சி : செஞ்சி அருகே இரண்டு நாட்களாக வெள்ளம் சூழ்ந்த மோட்டார் கொட்டகையில் உணவின்றி சிக்கி தவித்த தம்பதியை தீயணைப்பு துறையினர் மீட்டனர்.செஞ்சி அருகே உள்ள மணியம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் ஏழுமலை 75; இவரது மனைவி ஷாலினி 45; இவர்களின் விவசாய நிலம் அதே ஊரில் சங்கராபரணி ஆற்றங்கரையில் உள்ளது. கடந்த 18ம் தேதி இவர்கள் மோட்டார் கொட்டகைக்கு சென்றனர். மழை விடாமல் கொட்டியதால் இரவு

செஞ்சி : செஞ்சி அருகே இரண்டு நாட்களாக வெள்ளம் சூழ்ந்த மோட்டார் கொட்டகையில் உணவின்றி சிக்கி தவித்த தம்பதியை தீயணைப்பு துறையினர் மீட்டனர்.

செஞ்சி அருகே உள்ள மணியம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் ஏழுமலை 75; இவரது மனைவி ஷாலினி 45; இவர்களின் விவசாய நிலம் அதே ஊரில் சங்கராபரணி ஆற்றங்கரையில் உள்ளது. கடந்த 18ம் தேதி இவர்கள் மோட்டார் கொட்டகைக்கு சென்றனர். மழை விடாமல் கொட்டியதால் இரவு அங்கேயே தங்கினர்.

மறுநாள் அதிகாலையில் சங்கராபரணி ஆற்று வெள்ளம் மோட்டார் கொட்டகைக்குள் புகுந்தது. இதையடுத்து இருவரும் மோட்டார் கொட்டகையின் சிமெண்ட் சிலாப் மீது ஏரி உட்கார்ந்து கொண்டனர். 19ம் தேதி மாலை வரை இவர்களையாரும் கவனிக்க வில்லை. இதனால் அன்று இரவும் சிலாப் மீதே தங்கி இருந்தனர்.

நேற்று காலை ஆற்றில் நீர் வரத்து குறைந்ததும் கூச்சல் போட்டு பொது மக்களை உதவிக்கு அழைத்தனர்.இதை பார்த்து பொது மக்கள் செஞ்சி தீயணைப்பு மற்றும் மீட்பு படையினருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த செஞ்சி தீயணைப்பு நிலைய அலுவலர் வேல்முருகன் தலைமையிலான மீட்பு குழுவினர் நேற்று பகல் 11 மணிக்கு இருவரையும் பத்திரமாக மீட்டு, கரைக்கு கொண்டு வந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X