பொது செய்தி

இந்தியா

இன்ஸ்பெக்டர் உத்தரவு; போலீஸ் குடும்பம் தவிப்பு

Added : நவ 21, 2021
Share
Advertisement
ஹூப்பள்ளி : ஹூப்பள்ளி தெற்கு போக்குவரத்து போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் மஹாந்தேஷ் ஹொஸ்பேட் பிறப்பித்த உத்தரவு ஒன்று, சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.ஹூப்பள்ளி தெற்கு போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் மஹாந்தேஷ் ஹொஸ்பேட், புதிய உத்தரவொன்றை பிறப்பித்தார்.இதில் 'போலீஸ் நிலையத்தின் அனைத்து போலீசாரும், தங்களின் மற்றும் மனைவி குடும்பத்தினரில் யாராவது பத்திரிகை அல்லது

ஹூப்பள்ளி : ஹூப்பள்ளி தெற்கு போக்குவரத்து போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் மஹாந்தேஷ் ஹொஸ்பேட் பிறப்பித்த உத்தரவு ஒன்று, சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஹூப்பள்ளி தெற்கு போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் மஹாந்தேஷ் ஹொஸ்பேட், புதிய உத்தரவொன்றை பிறப்பித்தார்.இதில் 'போலீஸ் நிலையத்தின் அனைத்து போலீசாரும், தங்களின் மற்றும் மனைவி குடும்பத்தினரில் யாராவது பத்திரிகை அல்லது தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றினால் இதுபற்றி போலீஸ் நிலையத்துக்கு நேரில் வந்து தகவல் தெரிவிக்க வேண்டும்' என, உத்தரவிட்டுள்ளார்.

உத்தரவு பிரதியை பார்த்ததும், போலீஸ் நிலைய ஏட்டுகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதற்கு என்ன காரணம் என தெரியாமல், மண்டையை பிய்த்து கொள்கின்றனர்.ஹூப்பள்ளி தெற்கு போக்குவரத்து போலீஸ் நிலையத்தின், ஒவ்வொரு தகவலும் ஊடகங்களில் கசிகிறது.இதை கசிய விடுவது யார் என்பதை கண்டு பிடிக்கும் நோக்கில், இது போன்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டதா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X