பொது செய்தி

இந்தியா

எஸ்.வி.சாலை மெட்ரோ ரயில் நிலையத்தில் குரங்குகள் தொல்லை

Added : நவ 21, 2021
Share
Advertisement
பெங்களூரு : பெங்களூரின் எஸ்.வி.சாலை மெட்ரோ ரயில் நிலையத்துக்கு வந்து செல்லும் பயணியருக்கு, தற்போது புதிய பிரச்னை துவங்கியுள்ளது.பெங்களூரின் எஸ்.வி.சாலை எனும் சுவாமி விவேகானந்தர் சாலை மெட்ரோ ரயில் நிலையத்தில் குரங்குகளின் தொந்தரவு அதிகரித்துள்ளது.நடந்து செல்லும், நின்றிருக்கும் பயணியரின் கையிலிருந்து பேக், மொபைல் உட்பட மற்ற பொருட்களை பறித்து கொண்டு

பெங்களூரு : பெங்களூரின் எஸ்.வி.சாலை மெட்ரோ ரயில் நிலையத்துக்கு வந்து செல்லும் பயணியருக்கு, தற்போது புதிய பிரச்னை துவங்கியுள்ளது.

பெங்களூரின் எஸ்.வி.சாலை எனும் சுவாமி விவேகானந்தர் சாலை மெட்ரோ ரயில் நிலையத்தில் குரங்குகளின் தொந்தரவு அதிகரித்துள்ளது.நடந்து செல்லும், நின்றிருக்கும் பயணியரின் கையிலிருந்து பேக், மொபைல் உட்பட மற்ற பொருட்களை பறித்து கொண்டு தப்பியோடுகின்றன.

பெண் பயணியரின் துப்பட்டாவையும் விடுவதில்லை.குரங்குகளின் தொல்லையால், பயணியர் நொந்துள்ளனர். நாளுக்கு நாள் இப்பிரச்னை அதிகரிப்பதால், மெட்ரோ அதிகாரிகள், 'திருடர்கள் ஜாக்கிரதை' என பலகை வைப்பது போன்று, தற்போது 'குரங்குகள் ஜாக்கிரதை' என, கன்னடம், ஆங்கிலத்தில் எழுதப்பட்ட எச்சரிக்கை போஸ்டர் ஒட்டியுள்ளனர்.மெட்ரோ அதிகாரியொருவர் கூறியதாவது:குரங்குகள் பிரச்னை குறித்து வனத்துறைக்கு கடிதம் எழுதினோம்.

வனத்துறையினரும், குரங்குகளை கட்டுப்படுத்த முயற்சித்தும் பயனில்லை.பயணியரின் பை, மொபைல் போன்ற பொருட்கள், பெண்களின் துப்பட்டாவை இழுக்கிறது.பயணியர் மிரட்டினால், கோபத்துடன் அவர்களை கடிக்க பாய்கிறது. குரங்குகளால் தங்களுக்கு ஏற்பட்ட பிரச்னைகள் குறித்து, பலரும் புகார் அளித்துள்ளனர்.கொரோனாவுக்கு முன், ஹலசூரு மெட்ரோ நிலையத்தில், இப்பிரச்னை மிகவும் அதிகமாக இருந்தது.

தற்போது எஸ்.வி.சாலையில் குரங்கு தொந்தரவு அதிகரித்துள்ளது.மெட்ரோ நிலையத்தில், குரங்குகளின் எண்ணிக்கை குறைவுதான் என்றாலும், அவைகள் கொடுக்கும் தொந்தரவு மிக, மிக அதிகம்.ஆண்களை விட, பெண்களுக்கு அதிகம் தொந்தரவுக்கு ஆளாகின்றனர். பெண்களின் கைப்பை, உணவு பையை பறித்துச்சென்று, உயரமான பிளாட்பாரம்களிலிருந்து, கீழே வீசியெறிகிறது.சில மாதங்களுக்கு முன், பாதுகாப்பு ஊழியர் ஒருவரின், மொபைலை பறித்து சென்று, வீசியெறிந்ததில் போன் இரண்டு துண்டானது.வனத்துறை அதிகாரிகள், குரங்குகளை பிடிக்க மெட்ரோ நிலையத்துக்கு வருகின்றனர். அதிகாரிகள் வரும் நாட்களில், குரங்குகள் தலையே காண்பிப்பதில்லை.வனத்துறை அதிகாரிகள் எப்போது வருகின்றனர்; எப்போது செல்கின்றனர் என்பது, எங்களுக்கு தெரிவதில்லை. குரங்குகளுக்கு தெரிகிறது.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X