பொது செய்தி

தமிழ்நாடு

கடம்பூரில் தரைப்பாலத்தை அகலப்படுத்த அமைச்சர் உத்தரவு

Added : நவ 21, 2021
Share
Advertisement
ரிஷிவந்தியம் : தொடர் மழையால் பாதிக்கப்பட்ட கடம்பூர் கிராமத்தில் அமைச்சர் வேலு ஆய்வு செய்தார்.தொடர் மழையால் ரிஷிவந்தியம் அடுத்த கடம்பூர் கிராமம், புதுக்காலனி பகுதியில் தண்ணீர் தேங்கியது. 100க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததால், பொதுமக்கள் அவதியடைந்தனர்.மழை பாதித்த கடம்பூர் கிராமத்தில் அமைச்சர் வேலு ஆய்வு செய்தார். அப்போது தெருக்களுக்குள் தேங்கிய

ரிஷிவந்தியம் : தொடர் மழையால் பாதிக்கப்பட்ட கடம்பூர் கிராமத்தில் அமைச்சர் வேலு ஆய்வு செய்தார்.

தொடர் மழையால் ரிஷிவந்தியம் அடுத்த கடம்பூர் கிராமம், புதுக்காலனி பகுதியில் தண்ணீர் தேங்கியது. 100க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததால், பொதுமக்கள் அவதியடைந்தனர்.மழை பாதித்த கடம்பூர் கிராமத்தில் அமைச்சர் வேலு ஆய்வு செய்தார். அப்போது தெருக்களுக்குள் தேங்கிய தண்ணீரை உடனே அப்புறப்படுத்த அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

முன்னதாக, சங்கராபுரம் - திருக்கோவிலூர் சாலையின் குறுக்கே கடம்பூரில் அதிகளவு தண்ணீர் சென்ற பகுதியில் ஆய்வு செய்த அவர், அந்த சாலையில் உள்ள தரைப்பாலத்தை அகலப்படுத்துமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.ஆய்வின் போது கலெக்டர் ஸ்ரீதர், கள்ளக்குறிச்சி தெற்கு மாவட்ட தி.மு.க., பொறுப்பாளர் வசந்தம் கார்த்திகேயன் எம்.எல்.ஏ., வடக்கு மாவட்ட பொறுப்பாளர் உதயசூரியன் எம்.எல்.ஏ., திட்ட இயக்குநர் மணி, சங்கராபுரம் தாசில்தார் பாண்டியன், மாவட்ட சேர்மன் புவனேஸ்வரிபெருமாள், ஒன்றிய சேர்மன் வடிவுக்கரசி சாமிசுப்ரமணியன், ஒன்றிய செயலாளர்கள் பெருமாள், பாரதிதாசன், துணை சேர்மன் சென்னம்மாள்அண்ணாதுரை, பி.டி.ஓ., க்கள் ஆறுமுகம், நாராயணசாமி, மாவட்ட கவுன்சிலர் கோவிந்தராஜி, கட்சி நிர்வாகிகள் செல்வக்குமார், செந்தில், ராஜாராமன் உட்பட பலர் உடனிருந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X