பொது செய்தி

இந்தியா

சிக்கபல்லாபூர் மாவட்டத்தில் தொடர் மழை

Added : நவ 21, 2021
Share
Advertisement
சிக்கபல்லாபூர் : ''சிக்கபல்லாபூர் மாவட்டத்தில் தொடர் மழையால் இடிந்த வீடுகளை புதுப்பிக்க, ஐந்து லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும். வீடுகளை இழந்தோருக்கு, மாற்று வசதி செய்யப்பட்டுள்ளது,'' என சுகாதாரம், குடும்ப நலத்துறை அமைச்சர் சுதாகர் தெரிவித்தார்.சிக்கபல்லாபூரில் மழை சேத பகுதிகளை அமைச்சர் சுதாகர், நேற்று பார்வையிட்டார். வெள்ளம் பாய்ந்தோடும் பாலங்களை ஆய்வு

சிக்கபல்லாபூர் : ''சிக்கபல்லாபூர் மாவட்டத்தில் தொடர் மழையால் இடிந்த வீடுகளை புதுப்பிக்க, ஐந்து லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும்.

வீடுகளை இழந்தோருக்கு, மாற்று வசதி செய்யப்பட்டுள்ளது,'' என சுகாதாரம், குடும்ப நலத்துறை அமைச்சர் சுதாகர் தெரிவித்தார்.சிக்கபல்லாபூரில் மழை சேத பகுதிகளை அமைச்சர் சுதாகர், நேற்று பார்வையிட்டார்.

வெள்ளம் பாய்ந்தோடும் பாலங்களை ஆய்வு செய்தார்.பின் அவர் கூறியதாவது:சிக்கபல்லாபூரில் மழையால், பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது. 50 ஆண்டு வரலாற்றில் இது போன்ற மழையை பார்த்ததில்லை.ஒரு பக்கம் மகிழ்ச்சி; மற்றொரு பக்கம் தொந்தரவு ஏற்பட்டுள்ளது. மழை பாதிப்பு பகுதிகளில் மாவட்ட நிர்வாகம் சிறப்பாக பணியாற்றுகிறது.எச்சரிக்கைக்கு பின்னரும், சிலர் நீரில் இறங்கி, உயிரை இழக்கின்றனர். இவர்களை மக்கள் பிரதிநிதிகள் எச்சரிக்க வேண்டும்.

மழை ஆபத்தை ஒற்றுமையாக எதிர்க்கொள்ள வேண்டும். வீடுகளை இழந்தவர்கள், பயப்பட வேண்டியதில்லை.மழையால் 436 வீடுகள் இடிந்துள்ளது.இந்த வீடுகளை புதுப்பிக்க, ஐந்து லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும். வீடுகளை இழந்தோருக்கு, மாற்று வசதி செய்யப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X