பொது செய்தி

தமிழ்நாடு

சிறுவங்கூர் ஏரிக்கு செல்லும் ஓடை ஆக்கிரமிப்பு அகற்றப்படுமா?

Added : நவ 21, 2021
Share
Advertisement
கள்ளக்குறிச்சி : அரியபெருமானுார் - சிறுவங்கூர் ஏரிக்கு செல்லும் ஓடையில் உள்ள ஆக்கிரமிப்பினை அகற்ற வேண்டும் என, அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.கள்ளக்குறிச்சி அடுத்த சிறுவங்கூரில் உள்ள சமத்துவபுரம் குடியிருப்பில் 100 குடும்பங்கள் உள்ளன. இந்த கட்டடத்திற்கு எதிரே மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை கட்டுமான பணிகள் நடந்து வருகிறது.இந்த கட்டடங்களை

கள்ளக்குறிச்சி : அரியபெருமானுார் - சிறுவங்கூர் ஏரிக்கு செல்லும் ஓடையில் உள்ள ஆக்கிரமிப்பினை அகற்ற வேண்டும் என, அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கள்ளக்குறிச்சி அடுத்த சிறுவங்கூரில் உள்ள சமத்துவபுரம் குடியிருப்பில் 100 குடும்பங்கள் உள்ளன. இந்த கட்டடத்திற்கு எதிரே மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை கட்டுமான பணிகள் நடந்து வருகிறது.இந்த கட்டடங்களை ஒட்டியவாறு அரியபெருமானுார் - சிறுவங்கூருக்கு ஏரிக்கு செல்லும் ஓடை உள்ளது. இந்த ஓடையினை அப்பகுதியை சேர்ந்த சிலர் ஆக்கிரமித்துள்ளதால், குறுகியுள்ளது.

கடந்த சில தினங்களாக பெய்து வரும் மழையினால், அரியபெருமானுார் ஏரி நிரம்பி உபரிநீர் சிறுவங்கூர் ஏரிக்கு செல்கிறது.ஆக்கிரமிப்பில் உள்ள ஓடையின் பரப்பளவு குறுகியதால், தண்ணீர் வெளியேறி சிறுவங்கூர் சமத்துவபுரம் வளாகம் மற்றும் மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை கட்டடங்களை சூழ்ந்து நிற்கிறது. இதனால் அங்கு வசிக்கும் பொதுமக்கள் கடும் சிரமத்திற்குள்ளாகின்றனர்.மருத்துவகல்லுாரி வளாகத்தில் தேங்கும் நீரால் பணிகள் பாதிப்புக்குள்ளாகும் நிலை ஏற்பட்டுள்ளது.

கல்லுாரி பயன்பாட்டிற்கு வந்த பின் தண்ணீர் தேங்கினால், மாணவர்கள் கடுமையாக பாதிக்கப்படுவர்.எனவே, அரியபெருமானுார் - சிறுவங்கூர் ஓடை ஆக்கிரமிப்புகளை அகற்றி, அதை அகலப்படுத்த வருவாய் மற்றும் ஊரக வளர்ச்சி துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X