பொது செய்தி

இந்தியா

சீக்ரெட் சிங்காரம்

Added : நவ 21, 2021
Share
Advertisement
அம்சமானவர் மாயம்!உடுப்பி பெஜாவர் மடாதிபதி பற்றி அம்சமான இசையமைப்பாளர் பேசிய விமர்சனத்துக்கு எதிர்ப்பாக பசவனகுடி போலீஸ் நிலையத்தில் புகார் ஒண்ணு பதிவு செய்தாங்க. இது சம்பந்தமாக விசாரிக்க நோட்டீஸ் கொடுக்க சென்றபோது ,அவர் வீட்டில் இல்லையாம்; செல்போனும் 'சுவிட்ச் ஆப்' ஆகியுள்ளதாம்.எனவே, நோட்டீசை வீட்டு சுவரில் ஒட்டியுள்ளனர். இது ஒரு நோட்டீஸ் மட்டுமல்ல; இதே

அம்சமானவர் மாயம்!

உடுப்பி பெஜாவர் மடாதிபதி பற்றி அம்சமான இசையமைப்பாளர் பேசிய விமர்சனத்துக்கு எதிர்ப்பாக பசவனகுடி போலீஸ் நிலையத்தில் புகார் ஒண்ணு பதிவு செய்தாங்க. இது சம்பந்தமாக விசாரிக்க நோட்டீஸ் கொடுக்க சென்றபோது ,அவர் வீட்டில் இல்லையாம்;

செல்போனும் 'சுவிட்ச் ஆப்' ஆகியுள்ளதாம்.எனவே, நோட்டீசை வீட்டு சுவரில் ஒட்டியுள்ளனர். இது ஒரு நோட்டீஸ் மட்டுமல்ல; இதே பிரச்னைக்கு ஹனுமந்த நகர் போலீஸ் நிலையத்திலும் புகார் பதிவாகி, நோட்டீஸ் வீட்டைத்தேடி போயிருக்கு.சினிமா இசையமைப்பாளர் தான் உண்டு; தன் தொழில் உண்டு என இருக்காமல், தத்துவம் பேசி வாங்கி கட்டிக்கொண்டு, செல்போனையும் வேலை செய்ய விடாமல் 'ஆப்' செய்ய வைத்திருக்குதே.

40 பர்சன்ட் கமிஷன் உண்மையா?

ஆளும் பூக்கார அரசு கான்ட்ராக்ட் காரர்களுக்கு பல்வேறு துறைகளில் இருந்து 17 ஆயிரம் கோடி ரூபாய் பாக்கி வைத்திருக்குதுன்னு, அரசுக்கு மட்டுமல்ல, நாட்டு பிரதமருக்கே கான்ட்ராக்ட்காரங்க சங்கம் புகார் அனுப்பி இருக்காங்க.டெண்டர் பில் பாஸ் ஆகனுமா, 40 பர்சன்ட் கமிஷன் தரனும்னு கேட்டால், எந்த வேலையை எப்படி நியாயமா செய்து முடிக்க முடியும்னு அவர்கள் பேஜார் படுறாங்க.கடந்த தேர்தலில் கை காரர்களை 10 பர்சன்ட் கமிஷன் கவர்மென்ட்டுனு சொன்னாங்க.

தற்போது 40 பர்சன்ட்டாக இன்கிரிமென்ட் ஆகியிருக்குன்னு குற்றம் சாட்டுறாங்க.இதெல்லாம் ஆதாரமில்லா குற்றச்சாட்டுக்கு சி.எம்., மறுப்பு சொல்லி இருக்காரு.ஆபத்தான 2 சித்து!நாட்டில் கை கட்சியில் இரண்டு 'சித்து' களால் பேராபத்து ஏற்பட்டிருக்குது. பஞ்சாபில் ஒரு சித்து ஆட்டமும்;

கர்நாடகாவில் இன்னொரு சித்து ஆட்டமும் அந்த கட்சியை காலி செய்ய போகுதுன்னு 'மாஜி' சி.எம்., துமகூரு 'ஜன ஸ்வராஜ்' நிகழ்ச்சியில் கூறினாரு.கர்நாடக மாநில கை கட்சியில் அடுத்த சி.எம்., பதவிக்கு கடும் போட்டி, உள்குத்து வேலைகள் ஓயலை. அவர்களின் போட்டியினாலே அக்கட்சி காலியாக போகுதுன்னு தெரிவிச்சாரு.அடுத்த அசம்பிளி தேர்தலில் இவர்களின் இலக்கு, 'தனி மெஜாரிட்டி' ஏற்படுத்த கூட்டு பிரச்சார பயணம் தொடங்கிட்டாங்க.3

ஒரிஜினலுக்கே மவுசு!புல்லுக்கட்டு கட்சியை விட்டு ஒதுங்கிய, சினிமா தயாரிப்பாளரு, பூ கட்சியில் 'சீட்' தருவாங்கன்னு எதிர்ப்பார்த்தாரு.வெளி கட்சியில் இருந்து வந்தவங்க யாருக்கும் சீட் தர முடியாதுன்னு அவரை அழ வச்சிட்டாங்க. லிஸ்ட்டில் பெயர் இல்லாமல் தேம்பினாரு.கோலாரின் புல்லுக்கட்டு எம்.எல்.சி.,யும் கூட சீட் எதிர்ப்பார்த்து

பெயில் ஆயிட்டாரு. ஒரிஜினல் பூக்காரர்களுக்கு மட்டுமே சீட் என்பதை நிரூபிச்சிட்டாங்க.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X