பொது செய்தி

தமிழ்நாடு

மாநில கராத்தே போட்டியில் ஜே.எஸ்., பள்ளி மாணவர் வெற்றி

Added : நவ 21, 2021
Share
Advertisement
கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி ஜே.எஸ்., குளோபல் பள்ளியில் 4ம் வகுப்பு மாணவர் மாநில அளவிலான கராத்தே போட்டியில் வெற்றி பெற்றார்.சேலம் ஜே.எம்.ஜே., கிராண்ட் ஹாலில் 8 முதல் 17 வயதுக்குட்பட்ட பள்ளி மாணவர்களுக்கான மாநில அளவிலான கராத்தே போட்டி, கடந்த 14ம் தேதி நடந்தது. இப்போட்டியில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 248 பேர் பங்கேற்றனர். இதில் 9 -10 வயது மாணவர்களுக்கான
 மாநில கராத்தே போட்டியில்  ஜே.எஸ்., பள்ளி மாணவர் வெற்றி

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி ஜே.எஸ்., குளோபல் பள்ளியில் 4ம் வகுப்பு மாணவர் மாநில அளவிலான கராத்தே போட்டியில் வெற்றி பெற்றார்.

சேலம் ஜே.எம்.ஜே., கிராண்ட் ஹாலில் 8 முதல் 17 வயதுக்குட்பட்ட பள்ளி மாணவர்களுக்கான மாநில அளவிலான கராத்தே போட்டி, கடந்த 14ம் தேதி நடந்தது. இப்போட்டியில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 248 பேர் பங்கேற்றனர். இதில் 9 -10 வயது மாணவர்களுக்கான பிரிவில், கள்ளக்குறிச்சி ஜே.எஸ்., குளோபல் அகாடமி சி.பி.எஸ்.இ., பள்ளியில் 4ம் வகுப்பு பயிலும் மாணவர் பழனியரசன் இரண்டாமிடம் பிடித்து வெற்றி பெற்றார்.இதன் மூலம் சென்னையில் நடைபெறும் மாநில அளவிலான கராத்தே போட்டியில் பங்குபெற தகுதி பெற்றுள்ளார். இதையொட்டி ஜே.எஸ்., பள்ளி நிறுவனர் செந்தில்குமார், தாளாளர் ஜனனிசெந்தில்குமார், தலைமை ஆசிரியர் ஜெயலஷ்மி, கராத்தே பயிற்றுநர் குமரேசன் ஆகியோர் வெற்றி பெற்ற மாணவர் பழனியரசனை பாராட்டி சான்றிதழ், கோப்பை வழங்கினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X