பொது செய்தி

தமிழ்நாடு

கோமுகி அணையில் இருந்து 6,700 கனஅடி நீர் வெளியேற்றம்

Added : நவ 21, 2021
Share
Advertisement
கச்சிராயபாளையம் : கோமுகி அணையிலிருந்து நேற்று வினாடிக்கு 6 ஆயிரத்து 700 கன அடி உபரி நீர் வெளியேற்றப்பட்டது.கச்சிராயபாளையம் அடுத்த கல்வராயன் மலையின் அடிவாரத்தில் அமைந்துள்ளது கோமுகி அணை. கடந்த சில தினங்களாக அணையின் நீர் பிடிப்பு பகுதியான கல்வராயன் மலையில் தொடர் மழை பெய்து வருகிறது. நேற்று கோமுகி அணை பகுதியில் 13.2 செ.மீ., மழை பதிவாகியது. இதனால் பொட்டியம், கல்படை,
 கோமுகி அணையில் இருந்து  6,700 கனஅடி நீர் வெளியேற்றம்

கச்சிராயபாளையம் : கோமுகி அணையிலிருந்து நேற்று வினாடிக்கு 6 ஆயிரத்து 700 கன அடி உபரி நீர் வெளியேற்றப்பட்டது.கச்சிராயபாளையம் அடுத்த கல்வராயன் மலையின் அடிவாரத்தில் அமைந்துள்ளது

கோமுகி அணை. கடந்த சில தினங்களாக அணையின் நீர் பிடிப்பு பகுதியான கல்வராயன் மலையில் தொடர் மழை பெய்து வருகிறது. நேற்று கோமுகி அணை பகுதியில் 13.2 செ.மீ., மழை பதிவாகியது. இதனால் பொட்டியம், கல்படை, மல்லிகைப்பாடி ஆகிய ஆறுகளில் நீர் வரத்து அதிகரித்தது.அணையின் முழு கொள்ளளவான 46 அடியில் (560 மில்லியன் கன அடி தற்போது 44 அடி (489.56 மில்லியன் கன அடி ) நீர் நிரம்பியுள்ளது.

இதனை தொடர்ந்து அணையின் பாதுகாப்பு கருதி கோமுகி ஆறு வழியாக வரத்து நீர் முழுவதும் நேற்று முன் தினம் இரவு 10 மணி முதல் வினாடிக்கு 6 ஆயிரத்து 700 ம் கன அடி உபரி நீர் வெளியேற்றப்பட்டது.இதனால் கோமுகி ஆற்றில் வெள்ள பெருக்கு ஏற்பட்டது. கரையோர மக்களுக்கும் வெள்ள அபாய எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. அணைக்கு நீர் தொடர்ந்து வந்து கொண்டு இருப்பதால் பொதுப் பணித்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X