சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கடலுாரில் வடியாத வௌ்ளம்: 2வது நாளாக மக்கள் தவிப்பு

Updated : நவ 21, 2021 | Added : நவ 21, 2021 | கருத்துகள் (4)
Share
Advertisement
கடலுார் : கடலுார் தென்பெண்ணையாற்றில் ஏற்பட்ட வரலாறு காணாத பெரு வெள்ளத்தால் தீவாக மாறிய கிராமங்கள் மற்றும் நகர் பகுதிகளில் தண்ணீர் வடியாமல் இரண்டாம் நாளாக மக்கள் தவிக்கின்றனர்.தென்பெண்ணையாற்று நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக, கெலவரப்பள்ளி, கே.ஆர்.பி., அணையில் இருந்து நிரம்பிய 51 ஆயிரம் கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டது.திருவண்ணாமலை மாவட்டம்
கடலூர், வெள்ளம், மக்கள், தவிப்பு

கடலுார் : கடலுார் தென்பெண்ணையாற்றில் ஏற்பட்ட வரலாறு காணாத பெரு வெள்ளத்தால் தீவாக மாறிய கிராமங்கள் மற்றும் நகர் பகுதிகளில் தண்ணீர் வடியாமல் இரண்டாம் நாளாக மக்கள் தவிக்கின்றனர்.


latest tamil newsதென்பெண்ணையாற்று நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக, கெலவரப்பள்ளி, கே.ஆர்.பி., அணையில் இருந்து நிரம்பிய 51 ஆயிரம் கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டது.


latest tamil news


Advertisement


திருவண்ணாமலை மாவட்டம் சாத்தனுார் அணையில் ஷட்டர் பழுதானதால் திருக்கோவிலுார் அணைக்கட்டிற்கு நேரடியாக தண்ணீர் வந்தது.அங்கு ஏற்கனவே நிரம்பியிருந்த நிலையில், நேற்று முன்தினம் காலை 1.10 லட்சம் கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டது.


latest tamil newsகனமழையால் தென்பெண்ணையாற்றில் தண்ணீர் ஓடிய நிலையில், ஒரே நேரத்தில் 1.50 லட்சம் கன அடி தண்ணீர் கரைபுரண்டு வந்தது.கடலுார் மாவட்டம் பண்ருட்டி, கண்டரக்கோட்டை, மேல்பட்டாம்பாக்கம், மருதாடு, சாவடி, ஆல்பேட்டை வழியாக கடலுார் வந்தடைந்தது. வரலாறு காணாத அளவில் 50 ஆண்டுகளுக்கு பிறகு தண்ணீர் வந்ததால், தாழங்குடா பகுதி முகத்துவாரம் வழியாக கடல் உள் வாங்கவில்லை.


latest tamil newsஇதனால், சுற்றியுள்ள நாணமேடு, உச்சிமேடு, கண்டக்காடு, குண்டுஉப்பலவாடி, பெரிய கங்கணாங்குப்பம் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட கிராமங்களுக்குள் தண்ணீர் புகுந்தது. பல கிராமங்கள் தீவாக மாறியுள்ளன.


latest tamil news
அதேபோன்று, கடலுார் செம்மண்டலம், குண்டு உப்பலவாடி உள்ளிட்ட பகுதிகளில் ஆற்றின் கரைகள் உடைந்தும், கரையை தாண்டியும் நகர் பகுதிக்குள் தண்ணீர் புகுந்தது. இதனால் பண்ருட்டியில் துவங்கி கடலுார் வரையுள்ள 100க்கும் மேற்பட்ட நகர பகுதிகளில் தண்ணீர் சூழ்ந்து, வீடுகளுக்குள் புகுந்தது.


latest tamil newsகடலுார் தென்பெண்ணையாற்றில் 50 ஆண்டுகளுக்கு பிறகு ஏற்பட்ட பெருவெள்ளம் குறித்து அரசு சார்பில் முன்னறிவிப்பு செய்யாததால், மக்கள் என்ன செய்வதென்று தெரியாமல் தவித்தனர். மின்சாரம் துண்டிக்கப்பட்டு, தண்ணீரும் சூழ்ந்ததால் உயிர் பிழைத்தால் போதும் என்ற நிலையில், முகாம்களில் தஞ்சம் புகுந்தனர். 15க்கும் மேற்பட்ட முகாம்களில் 10 ஆயிரம் பேர் வரையில் தங்கியுள்ளனர்.


latest tamil news
2ம் நாளாக தவிப்பு


இரண்டாவது நாளாக நேற்றும் தண்ணீர் வடியாததால், மின்சாரம், குடிநீர் இல்லாமலும் மக்கள் தவிப்பது தொடர்ந்தது. நேற்று முன்தினம் முழுதும் கிராமங்களில் அதிகாரிகள் பார்வையிட வரவில்லை. நேற்று அதிகாலை ஒவ்வொரு பாதிப்பு பகுதிக்கு பொறுப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டனர்.


latest tamil newsநேற்று காலை தீவாக மாறிய கிராம பகுதிகளுக்கு படகுகள் மூலமும், டிராக்டர்கள் மூலமும் அதிகாரிகள் சென்று பார்வையிட்டனர். ஜெனரேட்டர் மூலம் குடிநீர் மோட்டார்கள் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.


latest tamil newsதப்பியது கடலுார்


கடலுார் மாவட்டத்தில் கடந்த 18 ம் தேதி மழை வெளுத்து வாங்கியது. கடலுாரில் மட்டும் 14.2 செ.மீட்டர் பெய்தது. இதனால், கடலுார் வெள்ளக்காடாக மாறிய நிலையில், பல்வேறு நகர் பகுதிகள் தண்ணீர் சூழ்ந்தது.விவசாய நிலங்களும் மூழ்கின. ஏற்கனவே தொடர் மழை காரணமாக கடலுார் மாவட்ட ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள நிலையில் நேற்று முன் தினம் பெருவெள்ளம் கடும் பாதிப்பை ஏற்படுத்தியது. இரண்டு நாட்களாக மழை இல்லாததால், கடலுார் மிகப்பெரிய ஆபத்தில் இருந்து தப்பியுள்ளது.


latest tamil newslatest tamil newslatest tamil newslatest tamil newslatest tamil news


Advertisement
வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
elakkumanan - Naifaru,மாலத்தீவு
21-நவ-202123:18:50 IST Report Abuse
elakkumanan திருட்டு திராவிடால்ஸ் ஆட்சியில், டுமீல் மாநில வளர்ச்சி... ரோட்டுல போட் உடுறோம்... இதுல, அண்ணாமலை மேல கோவம் இதுக்களுக்கு... நம்ம லச்சனம்தான் தெரியுதே.. ஏதோ அண்ணாமலை மேல ஐநூறு கோடிக்கு கேஸ் போடுவோம்னு ஒரு கருமம் பீத்துச்சு.. திருட்டு பயலுக.. திருடுவது என்பது ஒரு வாழும் வழியாக மாற்றியதுதான் திராவிட கேவலம்... கயிறு தயாரிக்கும் தொழில் கடலூரில் ரொம்ப பேமஸ் ...நாளே நாலு முழம்.... தெரிஞ்சா சரி...
Rate this:
Cancel
R VENKATARAMANAN - Chennai,இந்தியா
21-நவ-202119:14:23 IST Report Abuse
R VENKATARAMANAN இந்த காட்சிகள் விடியலைய நோக்கி பயணம். உருப்படாத திருட்டு கழகங்கள் ஆட்சியின் அவலங்கள். திருட்டு என்பது பொருத்தமான பெயர் தான். மத்திய அரசு கொடுக்கின்ற பணத்தையே எனப்ப மிட நிதி அமைச்சூர் சில உத்தரவுகளை (வாய் மொழியில்) கொடுக்கிறார். முந்திய அரசும் ஊழலாதிளைத்துள்ளது யிருக்கழகங்களும் உன்னாலே நஙகேட்டேனான் என்னாலே நீ கெட்டை கதையை தான். என்னமோ விடியல் அரசு சுத்தமான காய் என்று பீற்றி கொள்ள ஆ தீ முக்க ( ஆண்ட ) அமைச்சர்கள் மேல் கேசுகள் போட்டு உத்தமபுடிகிறான் என்று காட்டா முயலுகிறது. இப்போ ஆரம்பமே இவர்கள் பழைய வேலயை காட்ட ஆரம்பித்து விட்டார்கள். தீபாவளி ஸ்வீட் விஷயத்தில் தக்க படி எதிர் கட்சி அறிக்கை விட்டாதால் முழித்து கொண்டு சுதாரித்தார்கள். மத்திய நிதி கொடுத்தில் கையாடல் ஜில்பா வேலை தொடங்கி விட்டது. அதுவும் வெளிச்சத்திற்கு வந்து விட்டது.அவர்களால் திருடாமல் இருக்கமுடியாது. அது அவர்கள் குலத்தொழில் . பாஜக அண்ணாமலையிடம் தப்பிக்க முடியாது. திமுக அதிமுக இருவருமே கூட்டுகளவாளிகள் தான். எனவே அண்ணாமலை பொறுப்பேற்று இவர்கள் எல்லோரையும் விசாரணைக்கு கொண்டு வந்து அரசிலுக்கு வந்தபிறகு சமபாதித்த சொத்துக்கள் அனைத்தையம் சர்க்கார் மயமாகவேண்டும்.
Rate this:
Cancel
Ram - ottawa,கனடா
21-நவ-202116:41:48 IST Report Abuse
Ram விடியல் அரசு வந்து படையல் கொடுக்கும் வரை கொஞ்சம் காத்திருங்கள் மக்களே
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X