பொது செய்தி

தமிழ்நாடு

'மாஜி' டி.ஜி.பி., வழக்கு: பெண் டி.ஐ.ஜி., ஆஜராக உத்தரவு

Added : நவ 21, 2021
Share
Advertisement
விழுப்புரம் : முன்னாள் சிறப்பு டி.ஜி.பி., மீதான பாலியல் தொல்லை வழக்கில், 3வது சாட்சியான சென்னை பெண் டி.ஐ.ஜி.,யை வரும் 23ம் தேதி ஆஜர்படுத்த நீதிபதி கோபிநாதன், சி.பி.சி.ஐ.டி., போலீசாருக்கு உத்தரவிட்டார்.தமிழக முன்னாள் சிறப்பு டி.ஜி.பி., பாலியல் தொல்லை கொடுத்ததாக, பெண் ஐ.பி.எஸ்., அதிகாரி புகார் அளித்தார். இதையடுத்து, 'சஸ்பெண்ட்' செய்யப்பட்ட டி.ஜி.பி., மீதும், பெண் அதிகாரியை மிரட்டி

விழுப்புரம் : முன்னாள் சிறப்பு டி.ஜி.பி., மீதான பாலியல் தொல்லை வழக்கில், 3வது சாட்சியான சென்னை பெண் டி.ஐ.ஜி.,யை வரும் 23ம் தேதி ஆஜர்படுத்த நீதிபதி கோபிநாதன், சி.பி.சி.ஐ.டி., போலீசாருக்கு உத்தரவிட்டார்.தமிழக முன்னாள் சிறப்பு டி.ஜி.பி., பாலியல் தொல்லை கொடுத்ததாக, பெண் ஐ.பி.எஸ்., அதிகாரி புகார் அளித்தார்.

இதையடுத்து, 'சஸ்பெண்ட்' செய்யப்பட்ட டி.ஜி.பி., மீதும், பெண் அதிகாரியை மிரட்டி கார் சாவியை பறித்த, செங்கல்பட்டு முன்னாள் எஸ்.பி., மீதும், விழுப்புரம் சி.பி.சி.ஐ.டி., போலீசார் 4 பிரிவுகளில் வழக்குப் பதிந்தனர்.இவ்வழக்கு விசாரணை விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. நேற்று நடந்த வழக்கு விசாரணையில், சிறப்பு டி.ஜி.பி., செங்கல்பட்டு முன்னாள் எஸ்.பி., ஆகியோர் ஆஜராகவில்லை. அதற்கான காரணம் குறித்து வழக்கறிஞர்கள் ரவீந்திரன், ஹேமராஜன் ஆகியோர் மனு தாக்கல் செய்தனர்.

இதனை நீதிபதி கோபிநாதன் ஏற்றுக் கொண்டார்.அதன் பின், டி.ஜி.பி., தரப்பில், ஏற்கனவே தாக்கல் செய்த 2 மனுக்களின் மீதான விசாரணை நடந்தது. அப்போது, டி.ஜி.பி., தரப்பு வழக்கறிஞர் ரவீந்திரன், இவ்வழக்கு தொடர்பாக மேலும் சில ஆவணங்களை தரும்படியும், பெண் ஐ.பி.எஸ்., அதிகாரியிடம் குறுக்கு விசாரணை முடிந்த பிறகே, மற்ற சாட்சிகளிடம் விசாரணை நடத்தும்படி வாதிட்டார்.

அதற்கு அரசு தரப்பில் வழக்கறிஞர் கலா, ஆட்சேபனை செய்தார்.இதையடுத்து, இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி கோபிநாதன், டி.ஜி.பி., தரப்பில் ஏற்கனவே கேட்கப்பட்ட ஆவணங்கள் சி.பி.சி.ஐ.டி., போலீசார் மூலம் வழங்கப்பட்டுள்ளது.ஒவ்வொரு முறையும், ஏதாவது ஆவணங்களை கேட்டு மனு தாக்கல் செய்வதை ஏற்க முடியாது. பெண் ஐ.பி.எஸ்., அதிகாரியிடம் குறுக்கு விசாரணை முடிந்த பிறகுதான், மற்ற சாட்சிகளை விசாரிக்க வேண்டுமென்பது கட்டாயமில்லை.

எப்போது வேண்டுமானாலும் பெண் ஐ.பி.எஸ்., அதிகாரியிடம் குறுக்கு விசாரணை செய்யலாம் என்றார்.அதன் பின், டி.ஜி.பி., தரப்பு வழக்கறிஞர், இவ்வழக்கு சம்பந்தபட்ட டைரி மற்றும் பென் டிரைவ் வழங்கும்படி வாதிட்டார். அதற்கு வழக்கு சம்பந்தப்பட்ட டைரி, பெண் டிரைவ் பார்க்க நீதிமன்றத்திற்கு மட்டுமே அதிகாரம் உள்ளது. குற்றம் சாற்றப்பட்டவரிடம் எப்படி ஒப்படைக்க முடியும் என நீதிபதி கோபிநாதன் கூறினார்.மேலும், முதல் சாட்சியிடம் விசாரணை முடிந்து ஒருவாரத்திற்கு மேலாகியும், மற்ற சாட்சிகளை ஏன் ஆஜர்படுத்தவில்லை.

இவ்வழக்கை 3 மாதங்களுக்குள் விரைந்து முடிக்க வேண்டும் என ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. இந் நிலையில், சாட்சிகளை ஆஜர்படுத்த ஏன் தாமதம் செய்கிறீர்கள் என சி.பி.சி.ஐ.டி., போலீசாரிடம், நீதிபதி கோபிநாதன் கேள்வி எழுப்பினார்.எதிர்தரப்பு குறுக்கு விசாரணை நடத்தாவிட்டாலும், அரசு தரப்பு சாட்சி விசாரணை தொடர்ந்து நடைபெற வேண்டும் என நீதிபதி கூறினார்.

அதோடு, மற்ற சாட்சிகளுக்கு சம்மன் அனுப்பி உடனுக்குடன் ஆஜர்படுத்தும்படி உத்தரவிட்டார்.பின், இவ்வழக்கு தொடர்பாக அடுத்ததாக எந்த சாட்சியை ஆஜர்படுத்த உள்ளீர்கள் என நீதிபதி கோபிநாதன், சி.பி.சி.ஐ.டி., போலீசாரை கேட்டார். அதற்கு, போலீசார், 3வது சாட்சி, ஏற்கனவே திருச்சியில் டி.ஐ.ஜி.,யாக பணிபுரிந்து,

தற்போது சென்னை காவல்துறை தலைமையிடம் (நிர்வாக பிரிவு) டி.ஐ.ஜி.,யாகவுள்ள ஆனிவிஜயாவை ஆஜர்படுத்த உள்ளதாக தெரிவித்தனர்.இதையடுத்து, இவ்வழக்கு விசாரணையை வரும் 23ம் தேதிக்கு ஒத்திவைத்ததோடு, அன்று டி.ஐ.ஜி., ஆனிவிஜயா நேரில் ஆஜராக வேண்டும் என நீதிபதி கோபிநாதன் உத்தரவிட்டார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X