பொது செய்தி

தமிழ்நாடு

சூர்யா உருவ பொம்மை எரிப்பு

Added : நவ 21, 2021
Share
Advertisement
கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சியில் வன்னியர் சங்கம் சார்பில், நடிகர் சூர்யாவின் உருவ பொம்மை எரிக்கப்பட்டது.போராட்டத்திற்கு, வன்னியர் சங்க மாநில துணைத்தலைவர் நாராயணன் தலைமை தாங்கினார். பா.ம.க., மாநில துணை பொதுசெயலாளர் ரமேஷ், மாவட்ட செயலாளர் சரவணன், முன்னாள் எம்.எல்.ஏ., காசாம்பு பூமாலை முன்னிலை வகித்தனர். நடிகர் சூர்யாவின் உருவ பொம்மையினை எரித்து, ஊர்வலமாக சென்று
 சூர்யா உருவ பொம்மை எரிப்பு

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சியில் வன்னியர் சங்கம் சார்பில், நடிகர் சூர்யாவின் உருவ பொம்மை எரிக்கப்பட்டது.போராட்டத்திற்கு, வன்னியர் சங்க மாநில துணைத்தலைவர் நாராயணன் தலைமை தாங்கினார்.

பா.ம.க., மாநில துணை பொதுசெயலாளர் ரமேஷ், மாவட்ட செயலாளர் சரவணன், முன்னாள் எம்.எல்.ஏ., காசாம்பு பூமாலை முன்னிலை வகித்தனர். நடிகர் சூர்யாவின் உருவ பொம்மையினை எரித்து, ஊர்வலமாக சென்று போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தனர்.மனுவில், 'ஜெய்பீம் படத்தில் வரும் கதாபாத்திரங்களின் பெயர்கள், உண்மை சம்பவத்தின் போது நடந்த பெயர்களாக உள்ளது. ஆனால், சப் இன்ஸ்பெக்டர் அந்தோணிசாமி என்ற தலித் கிறிஸ்துவரின் பெயர் மட்டும் குருமூர்த்தி என மாற்றப்பட்டு, வன்னியர்களின் அடையாளமான அக்னி கலசத்தை காட்சிப்படுத்தியுள்ளர்.

ஜாதி வன்மத்தை துாண்டும் விதமாக ஜெய்பீம் இருப்பதால், கலவரம் ஏற்பட வாய்ப்புள்ளது. ஜெய்பீம் திரைப்பட இயக்குனர் ஞானவேல், தயாரிப்பாளர் ஜோதிகா சூர்யா, நடிகர் சூர்யா ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' கூறப்பட்டுள்ளது.வன்னியர் சங்க மாவட்ட செயலாளர் முத்துவேல், மாவட்ட தலைவர் கிருஷ்ணன், மாநில இளைஞர் சங்க துணை செயலாளர் தமிழரசன், ஒன்றிய செயலாளர் அன்பரசன், ராஜா, நகர செயலாளர்கள் கராத்தே மணி, அசோக்குமார், நகர நிர்வாகிகள் சக்திவேல், மணிகண்டன் உடனிருந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X