பொது செய்தி

இந்தியா

டேங்க் ஆபரேட்டர் கொலை தலைமறைவு நபர் கைது

Added : நவ 21, 2021
Share
Advertisement
வானூர் : ஆரோவில் அருகே டேங்க் ஆபரேட்டர் கொலை வழக்கில், தலைமறைவாக இருந்தவரை போலீசார் கைது செய்தனர்.புதுச்சேரி, கோரிமேடு, காமராஜர் நகர், கட்டபொம்மன் கோவில் வீதியை சேர்ந்தவர் மணிவண்ணன், 53; டேங்க் ஆபரேட்டரான இவரை, கடந்த மாதம் 14ம் தேதி இரவு, புதுச்சேரி கோரிமேடு எல்லையில், தமிழகப் பகுதியான திருநகரில் ஒரு கும்பல் வெட்டி கொலை செய்தது.இது குறித்து ஆரோவில் போலீசார் வழக்கு

வானூர் : ஆரோவில் அருகே டேங்க் ஆபரேட்டர் கொலை வழக்கில், தலைமறைவாக இருந்தவரை போலீசார் கைது செய்தனர்.

புதுச்சேரி, கோரிமேடு, காமராஜர் நகர், கட்டபொம்மன் கோவில் வீதியை சேர்ந்தவர் மணிவண்ணன், 53; டேங்க் ஆபரேட்டரான இவரை, கடந்த மாதம் 14ம் தேதி இரவு, புதுச்சேரி கோரிமேடு எல்லையில், தமிழகப் பகுதியான திருநகரில் ஒரு கும்பல் வெட்டி கொலை செய்தது.இது குறித்து ஆரோவில் போலீசார் வழக்கு பதிந்து, விசாரித்தனர். மேட்டுப்பாளையம் போக்குவரத்து முனையத்தில் கடந்த ஆண்டு நடந்த முன்னாள் கவுன்சிலர் மாந்தோப்பு சுந்தர் கொலை வழக்கில், மணிவண்ணன் மகன்கள் வினோத், சுந்தர் சம்பந்தப்பட்டு இருப்பதும்,

அதற்கு பழிக்கு பழியாக, மணிவண்ணனை கொலை செய்ததும் தெரிய வந்தது.அதன் பேரில் ஆரோவில் போலீசார் வழக்குப் பதிந்து, இந்த கொலைக்கு சதித்திட்டம் தீட்டியதாக மாந்தோப்பு சுந்தர் மனைவி செல்வி, அவரது மகன் ஜோஸ்சுவா உள்ளிட்ட பத்து பேரை கைது செய்தனர். இதில் தலைமறைவாக இருந்த புதுச்சேரி கோரிமேடு காமராஜர் நகரை சேர்ந்த சேட்டு (எ) அம்புரோஸ், 28; என்பவரை தேடி வந்தனர். இந்நிலையில் நேற்று அவரை கலைவாணன் நகர் அருகே போலீசார் கைது செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X