விழுப்புரம் - புருளியா எக்ஸ்பிரஸ் ரயிலில் திடீர் இன்ஜின் கோளாறு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

விழுப்புரம் - புருளியா எக்ஸ்பிரஸ் ரயிலில் திடீர் இன்ஜின் கோளாறு

Added : நவ 21, 2021
Share
விழுப்புரம் : விழுப்புரம் - புருளியா நோக்கி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் திடீரென இஞ்சின் கோளாறு ஏற்பட்டதால், ஒரு மணி நேரத்திற்கும் மேலாக தாமதமாக சென்றது.விழுப்புரத்தில் இருந்து திருக்கோவிலுார், திருவண்ணாமலை, வேலுார், காட்பாடி மார்க்கமாக மேற்கு வங்காள மாநிலம் புருளியாவிற்கு வாரந்தோறும் சனிக்கிழமையில் வாராந்திர எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்படுகிறது.இந்த ரயில்

விழுப்புரம் : விழுப்புரம் - புருளியா நோக்கி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் திடீரென இஞ்சின் கோளாறு ஏற்பட்டதால், ஒரு மணி நேரத்திற்கும் மேலாக தாமதமாக சென்றது.

விழுப்புரத்தில் இருந்து திருக்கோவிலுார், திருவண்ணாமலை, வேலுார், காட்பாடி மார்க்கமாக மேற்கு வங்காள மாநிலம் புருளியாவிற்கு வாரந்தோறும் சனிக்கிழமையில் வாராந்திர எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்படுகிறது.இந்த ரயில் விழுப்புரத்தில் இருந்து பகல் 12.15 மணிக்கு புறப்பட்டு, புருளியாவை மறுநாள் மாலை 6.30க்கு சென்றடைகிறது.

நேற்று பகல் 12.15 மணிக்கு, வழக்கம் போல் விழுப்புரம் ரயில் நிலையத்தில் இருந்து புருளியாவிற்கு எக்ஸ்பிரஸ் ரயில் புறப்பட்டது.இந்த ரயில் பகல் 12.30க்கு, விழுப்புரம் அருகே வெங்கடேசபுரம் என்ற இடத்தில் சென்ற போது, திடீரென ரயில் இன்ஜிசினில் கோளாறு ஏற்பட்டு, ரயில் அங்கேயே நிறுத்தப்பட்டது.இதுபற்றி ரயில் இன்ஜின் டிரைவர், விழுப்புரம் ரயில் நிலைய அதிகாரியிடம் தகவல் தெரிவித்தார்.

விழுப்புரம் ரயில் நிலையத்தில் இருந்து ரயில்வே தொழில்நுட்ப பிரிவு ஊழியர்கள் விரைந்து சென்று ரயில் இன்ஜினில் ஏற்பட்ட கோளாறை சரிசெய்ய முயன்றனர்; முடியவில்லை.தொடர்ந்து, விழுப்புரம் ரயில் நிலையத்தில் இருந்து மாற்று இன்ஜின் வெங்கடேசபுரத்திற்கு சென்றது. பழுதான இன்ஜின் அகற்றப்பட்டு, மாற்று இன்ஜின் பொருத்தப்பட்டு, புருளியா எக்ஸ்பிரஸ் ரயில் 1.15 மணி நேரம் தாமதமாக, மதியம் 1.45 மணிக்கு புருளியாவுக்கு புறப்பட்டது. ரயிலின் தாமதத்தால் அதிலிருந்த பயணிகள் சிரமப்பட்டனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X